Home /News /national /

பழங்குடி பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய 9 கிராமவாசிகள் - கர்நாடகாவில் கொடூரம்

பழங்குடி பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய 9 கிராமவாசிகள் - கர்நாடகாவில் கொடூரம்

Crime news: கர்நாடகா மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய புகாரில் ஒன்பது கிராமவாசிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Crime news: கர்நாடகா மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய புகாரில் ஒன்பது கிராமவாசிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Crime news: கர்நாடகா மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய புகாரில் ஒன்பது கிராமவாசிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்சின கன்னடா மாவட்டத்தில் கிராமவாசிகள் ஒன்பது பேர் பழங்குடி பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.அங்குள்ள பெத்தலகண்டி தாலுக்காவைச் சேர்ந்த குரிபல்லா என்ற கிராமத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பாக பெத்தலகண்டி காவல்துறை தெரிவித்ததாவது, கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா ஆகியோர் மீது 35 பழங்குடி பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் அந்த பெண்ணை தாக்கியும், அவரது உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியும் அதைப் படம் பிடித்தும் துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பழங்குடி பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இதை அந்த பெண் அரசு அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய் துறை அலுவலர்கள் சென்று நிலத்தை அளக்க முயன்றுள்ளனர். அந்த அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் அந்த ஒன்பது பேர் தடுத்ததாகவும் அந்த அதிகாரிகளை வெளியேற்றிய பின், பழங்குடி பெண் மீது இந்த கொடூர தாக்குதலை இவர்கள் அரங்கேற்றியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மற்றும் மூத்த சகோதரியும் தாக்கப்பட்டார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கடந்த 10 ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு - RTI மூலம் தகவல்

    இந்தியாவில் பழங்குடிகளுக்கு எதிரான தாக்குதலை தடுக்க பல்வேறு சிறப்பு சட்டங்கள் இருந்தவரும் நிலையில், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தவருகின்றன. குறிப்பாக, பழங்குடிகள் அதிகம் வாழும் ஜார்கண்ட் போன்ற மாநிலத்தில் கூட பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. அம்மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் காவல்நிலை விசாரணையில் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Crime News, Karnataka

    அடுத்த செய்தி