Home /News /national /

ராஜஸ்தானில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்தனர்

ராஜஸ்தானில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்தனர்

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்தனர். அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தென்னாப்பிரிக்காவில் இருந்து ராஜஸ்தான் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனைதொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பரவியது.

    அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட 9 பேருக்கும் தற்போது தொற்று பாதிப்பு இல்லை என்பது இரண்டு பரிசோதனைகளின் முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதனைதொடர்ந்து அவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டதாகவும், 7 நாட்கள் வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

    கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்தை டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

    Must Read : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு

    ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் ஜனவரி 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Omicron, Rajasthan

    அடுத்த செய்தி