உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடை அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, பிகானீர் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் மேற்குவங்க மாநிலம் டோஹோமொனி அருகே சென்ற போது, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து 12 பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றோடு ஒன்று மோதி சரிந்ததால், பயணிகள் அலறினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படை வீரர்கள் 9 பேரை சடலமாக மீட்டனர்.
மேலும் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து நேர்ந்த போது ரயில் அதிவேகத்தில் செல்லவில்லை என்றும், குறைந்த வேகத்திலேயே சென்றதாகவும் பயணிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடை அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்து விவரித்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.