ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

8th Vande Bharat train in the country | ஆந்திரா, தெலங்கானா இடையே 8வது வந்தே பாரத் ரயிலின் மூலம் சுற்றுலா மேம்படும் என்றும்,பொருளாதாரம் வளரும் என்றும் டிவிட்டரில் பிரதமர் மோடி பேச்சு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

நாட்டின் 8-வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மணிக்கு 160 முதல் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வந்தே பாரத் ரயில்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ஏழு வந்தே பாரத் ரயில்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், எட்டாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் செல்லும் வகையில் 8-வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா இடையே 8வது வந்தே பாரத் ரயிலின் மூலம் சுற்றுலா மேம்படும் என்றும், பொருளாதாரம் வளரும் என்றும் ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், ஆகிய இடங்களில் நின்று செல்லும் இந்த வந்தே பாரத் ரயிலின் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பங்கேற்றார்.

First published:

Tags: PM Modi, Vande Bharat