87 வயதில் யார் உதவியுமின்றி கழிப்பறை கட்டிய பாட்டி: அனைவரும் பயன்படுத்த இலவசம்

news18
Updated: May 4, 2018, 5:14 PM IST
87 வயதில் யார் உதவியுமின்றி கழிப்பறை கட்டிய பாட்டி: அனைவரும் பயன்படுத்த இலவசம்
87 வயதில் யார் உதவியுமின்றி கழிப்பறை கட்டும் பாட்டி
news18
Updated: May 4, 2018, 5:14 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூதாட்டி ஒருவர்  தனது வீட்டின் அருகே  யார் உதவியுமின்றி கழிப்பறை ஒன்றை கட்டி உள்ளார். கழிப்பறையை  அனைவரும் பயன்படுத்த இலவசம் எனவும் அவர் அறிவித்து உள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள பாலாலி கிராமத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம், கழிவறைகள் அமைக்கவேண்டியதன் கட்டாயத்தை கிராம நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றிய தகவல்களை அறிந்த 87 வயது பாட்டி ராக்கி,  திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

இதற்காக சொந்தமாக கழிப்பிடம் கட்ட முடிவு செய்தார் ராக்கி பாட்டி. தன்னிடம் பணம் இல்லாத நிலையில் தொய்வு அடையாமல், தானே கட்டட வேலைகளையும் செய்துள்ளார். 7 நாட்களுக்குள் கழிப்பறையை கட்டும் பணிகளை அவர் நிறைவு செய்துள்ளார். இது குறித்து அறிந்த உதம்பூர் துணை ஆணையர், ராக்கி பாட்டியை  பாராட்டி உள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், “பலவகை நோய்கள் பரவுவதால்  அனைவருக்கும் கழிப்பறை உபயோகப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். கழிப்பறை கட்ட பணம் இல்லை, எனவே எந்த கட்டட கருவிகளின்றியும், யாருடைய உதவியுமின்றி என் கைகளால் கழிப்பறை கட்ட முடிவெடுத்தேன், என் மகன் என் கழிப்பறைக்காக மண் செய்தார். 7 நாட்களுக்குள் என் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Loading...
First published: May 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்