Home /News /national /

11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?

11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?

Corona Vaccinne

Corona Vaccinne

தடுப்பூசி செலுத்திக் கொள்வது தனக்கு நல்ல பலனை தருவதால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக தெரிவித்த அந்த முதியவர் முதல் முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் 11 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் பலரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டுவரும் போதிலும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது இருக்கும் ஆர்வத்தை, பலரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் காட்டுவதில்லை. இதனால் முதல் தவணை செலுத்தியவர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருந்து வருகிறது.

    இப்படிப்பட்ட சூழலில் பீகாரைச் சேர்ந்த 84 வயதாகும் முதியவர் ஒருவர் 11 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக கூறி அதிரவைத்திருக்கிறார். நபர் ஒருவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி மட்டுமே தற்போது இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து சமீபத்தில் தான் மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியிருக்க ஒரு நபருக்கு எப்படி 11 முறை தடுப்பூசி போட்டிருக்க முடியும் என்பது திகைப்புக்குரியதாகும்.

    Also read:  பிச்சை எடுத்து ஆதரவற்றவர்களின் பசியாற்றிய பிரபல சமூக சேவகி காலமானார்!

    பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தின் ஓரய் எனும் கிராமத்தைச் சேர்ந்த 84 வயதாகும் பிரம்மதேவ் மண்டல் என்ற ஓய்வு பெற்ற தபால்துறை ஊழியர் தான் இந்த அதிரவைக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார். இவர் 12வது தவணை தடுப்பூசி செலுத்த வந்த போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்வது தனக்கு நல்ல பலனை தருவதால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக தெரிவித்த அந்த முதியவர் முதல் முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், டிசம்பர் 30ம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், ஒவ்வொரு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதிகளையும் குறித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு அற்புதமான தடுப்பூசியை உற்பத்தி செய்திருக்கிறது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    Also read:  வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

    இவர் 8 முறை தனது ஆதார் கார்டு, மொபைல் எண்ணை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், மனைவியின் வாக்காளர் அடையாளர் அட்டை, அவருடைய மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு 3 முறை பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

    ஆஃப்லைன் முறையில் முகாம்கள் நடைபெறும் போது, பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் கணினியில் பின்னர் தான் உள்ளீடு செய்யப்படும், அப்போது ஏற்கனவே இருக்கக் கூடிய தரவுகளை மீண்டும் உள்ளீடு செய்திருந்தால் சிஸ்டம் தானாகவே நிராகரித்துவிடும், இதனைப் பயன்படுத்தி தான் அந்த முதியவர் இத்தனை முறை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.

    இதனிடையே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona Vaccine, Covid-19 vaccine

    அடுத்த செய்தி