ஹோம் /நியூஸ் /இந்தியா /

பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகும் - அமைச்சர் அர்ஜுன் முண்டா

பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகும் - அமைச்சர் அர்ஜுன் முண்டா

ஜார்கண்டில் இருந்து ஓசூருக்கு வந்துள்ள 822 பழங்குடியின பெண்கள்

ஜார்கண்டில் இருந்து ஓசூருக்கு வந்துள்ள 822 பழங்குடியின பெண்கள்

டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஜார்கண்ட் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் நடத்திய ஆட்சேர்ப்பு இயக்கத்தில் மொத்தம் 1898 தேர்வர்களில் 822 பெண்களைக் கொண்ட முதல் பேட்ச்சிறப்பு ரயிலில் ஓசூருக்கு புறப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா செவ்வாய்க்கிழமை ஜார்கண்ட் மாநில ஹதியா ரயில் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு (தமிழ்நாடு) சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலைக்காக இடம்பெயர்வது ஒரு பெரிய பிரச்சனை, பெரும்பாலான கடத்தல் இந்த பகுதியில் நடக்கிறது. இதற்காக, மத்திய அமைச்சர் மற்றும் குந்தி  தொகுதி எம்.பி., அர்ஜூன் முண்டா, இடைநிலை தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்க, டாடா குழுமத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசினார்.

அதன் பிறகு, பழங்குடியினர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து டாடா குழும நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஜார்கண்ட் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களான குந்தி, செரைகேலா, சாய்பாசா மற்றும் சிம்டேகாவில் நடத்திய ஆட்சேர்ப்பு இயக்கத்தில் மொத்தம் 1898 தேர்வர்களில் 822 பெண்களைக் கொண்ட முதல் பேட்ச் இந்த ரயிலில் ஓசூருக்கு புறப்பட்டனர். இந்த பெண்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும், பயிற்சியின் போது அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும்  நிறுவனத்தால் வழங்கப்படும்.

18-20 வயதுக்குட்பட்ட, குறைந்தபட்சத் தகுதியாக இடைநிலை (10+2) முடித்த பெண்களை தேர்வு செய்துள்ளனர். ஒரு வருடத்திற்கு ₹15,000 சம்பளம் மற்றும் சட்டப்படி இதர ஊழியர் சலுகைகள் வழங்கப்படும்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்போன்களில் GPSக்கு பதிலாக இந்திய செயலியான NavICஐ கொண்டுவர முயல்கிறதா இந்தியா?

இந்நிலையில், அவர்களை சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைத்த அமைச்சர் ர்ஜுன் முண்டா, ஹதியா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு, பழங்குடியினப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார். 'சப்கா சாத், சப்கா விஸ்வாஸ் சாத்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரம். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் குறிப்பாக பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு காத்திருக்கின்றன என்றார் .

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதற்கு 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' வலியுறுத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் சம்பாதிப்பதுடன் உயர் கல்வியையும் பெற முடியும் என்றார்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் ஓசூர் போன்ற தொழில் நிலையங்களில் பயிற்சி பெற்று திறமையானவர்களாக மாறி, ஜார்க்கண்டில் ஓசூர் போன்ற வளாகத்தை உருவாக்கி இங்குள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். உங்கள் மகள்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.இப்போது நான் இந்த சிறுமிகளின் பாதுகாவலராக இருக்கிறேன், விரைவில் அவர்களைச் சந்திக்க ஓசூர் செல்கிறேன் என்று அமைச்சர் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Hosur, Jharkhand, TATA