• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 81 வயது ரிடையர்ட் பேராசிரியர்!

குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 81 வயது ரிடையர்ட் பேராசிரியர்!

Gang Rape

Gang Rape

இரவு விருந்துக்கு சென்ற தேவேந்திர பாண்டேவும், சிவ் நாராயண் பாண்டேவும் சேர்ந்து அந்த பண்ணை வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்த 38 வயதாகும் குடும்ப பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

  • Share this:
அரசுக் கல்லூரியில் பேராசியராக இருந்து ஓய்வு பெற்ற 81 வயது தாத்தாவும், அவரின் தொழில் கூட்டாளியான 60 வயது நபரும் சேர்ந்து, 38 வயதாகும் குடும்ப பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ணை வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சி ரகமாகவே இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே (வயது 60.), இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ரத்திபாத் எனும் கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.

Also Read: Chris Cairns | திடீரென மயங்கி விழுந்து  உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பண்ணை வீட்டுக்கு இரவு விருந்துக்கு வருமாறு சிவ் நாராயண் பாண்டே, தனது நண்பரும் 81 வயதான ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியருமான தேவேந்திர பாண்டே என்பவரை அழைத்துள்ளார். அதன் பேரில் இரவு விருந்துக்கு சென்ற தேவேந்திர பாண்டேவும், சிவ் நாராயண் பாண்டேவும் சேர்ந்து அந்த பண்ணை வீட்டில் வீட்டு வேலை பார்த்து வந்த 38 வயதாகும் குடும்ப பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், தொழிலதிபர் நாராயண் பாண்டே நடத்தி வந்த செக்யூரிட்டி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்று வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த 21 ஆண்டுகளாக அதே பண்ணை வீட்டில் தான் வீட்டு வேலை செய்து வருகிறார்.

Also Read: வரதட்சணைக்காக கணவன் செய்த கொடூரச் செயல்!.. துயரத்தில் 27 வயது பெண்!

பாதிக்கப்பட்ட பெண் ஒரு முறை குளித்துக் கொண்டிருந்த போது, நாராயண் பாண்டே அதை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல முறை அப்பெண்னை பாலியல் வன்புணர்வு செய்த நாராயண் பாண்டே, தனது நண்பரான ஓய்வு பெற்ற பேராசியருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த போது நிலைமை விபரீதமாக செல்வதை உணர்ந்த அப்பெண், இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தனது கணவரிடம் தெரிவிக்கவே இருவரும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசுக் கல்லூரியில் பேராசியராக இருந்து ஓய்வு பெற்ற 81 வயது தேவேந்திர பாண்டே, ஒரு எழுத்தாளரும் கூட, இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் ரேவா அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: