உத்தரப் பிரதேச மாநிலத்தில் 81 வயது ஓவியர் மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த நபரின் பெயர் மௌரிஸ் ரைடர். இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர் மீது டிஜிட்டல் ரேப் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட நபர் சிறுமியிடம் கை விரல்கள் மற்றும் கால் விரல்களை கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்.
Digital Rape என்றால் என்ன ?
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில், குற்றச் செயலைப் புரிந்த நபர் தனது ஆண் உறுப்பை அல்லாது, தனது வேறு பாகங்களை கொண்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது டிஜிட்டல் ரேப் பாலியல் குற்ற பிரிவில் சேரும். 2012 நிர்பயா வழக்குக்குப் பின் தான் இந்தியாவில் இந்த குற்றப்பிரிவு சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 81 வயது நபர் மீது இபிகோ 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். புகார் கொடுத்த சிறுமி பெற்றோர் இல்லாத காரணத்தால் வேறொரு நபரால் வளர்க்கப்படுகிறார். சிறுமியை வளர்க்கும் நபரும் இந்த ஓவியரும் 20 ஆண்டு கால நண்பர்கள். சிறுமியின் படிப்புக்காகவும் எதிர்காலத்திற்காகவும் அவரை வளர்க்கும் நபர் இந்த 81 வயது ஓவியரின் அடைக்கலத்தில் விட்டுச் சென்றுள்ளார். தனது கட்டுப்பாட்டில் இருந்த 17 வயது சிறுமியை அந்த நபர் ஏழு ஆண்டுகளாக தொடர் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சனைக்காக மனைவியை வீட்டில் சுவர் எழுப்பி சிறை வைத்த பிரபல தொழிலதிபர்..
அச்சம் காரணமாக ஓவியரின் குற்றச்செயல் தொடர்பாக புகார் அளிக்க இச்சிறுமி தயங்கிவந்துள்ளார். இந்நிலையில், சமீப காலமாக இவரின் குற்றச் செயல்களை ஆதாரமாக பதிவு செய்த அச்சிறுமி, அவற்றை காவல்துறையிடம் சமர்பித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த 81 வயது ஓவியரை கைது செய்த காவல்துறை 14 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்கவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Minor girl, Rape case