முகப்பு /செய்தி /இந்தியா / எஸ்.சி, ஓ.பி.சி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி: 8,000 பேர் பலன்- மத்திய அரசு தகவல்

எஸ்.சி, ஓ.பி.சி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி: 8,000 பேர் பலன்- மத்திய அரசு தகவல்

 மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

Free Coaching Scheme for SC and OBC Students | 1,239 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

போட்டித் தேர்வுகளை எழுத எஸ்.சி மற்றம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ’நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 8,761 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் இதன் மூலம் 1,239 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை https://socialjustice.gov.in/schemes/30 என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

Also Read : எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள்... கடைசியில் பீகார், முதலிடம் கேரளா... தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா?

2022-23ம் ஆண்டு இத்திட்டம் திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தங்களது விருப்பப்படி எந்த பயிற்சி நிலையத்திலும் மாணவர்கள் கற்கலாம் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Union Minister Ramdas Athawale