உன் மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கேட்ட முதியவர்: அடுத்து நடந்தது என்ன?

Representational image

முதியவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்ததால் அவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இருந்தனர் காவல்துறையினர்

  • Share this:
10,000 ரூபாய் தருகிறேன், உன் மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டுமென 33 வயது நபரிடம் கேட்ட 80 வயது முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷமாகந்த் துகாராம் நாயக் என்ற நவி மும்பை பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் பெரும் செல்வந்தருக்கு சொந்தமாக உல்வே பகுதியில் வீடுகள், வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

முதியவர் நாயக் அதே பகுதியில் உள்ள 33 வயது நபர் ஒருவரின் கடைக்கு அடிக்கடி சென்று வருவார். இருவரும் நல்ல பழக்கத்தில் இருந்து வந்துள்ளனர். இருவரும் குடும்ப நண்பர்களாகவும் பழகி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு முறை முதியவர் நாயக், கடைக்கு சென்ற போது உன் மனைவியை ஒரு நாள் இரவு என்னுடன் அனுப்பி வைக்கிறாயா, அவருடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும், உனக்கு 5000 ரூபாய் தருகிறேன் என கேட்டிருக்கிறார். அந்த கடைக்காரர் இதை பெரிதுபடுத்தாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மீண்டும் அந்த கடைக்கு சென்ற அந்த முதியவர் நாயக், உன் மனைவியை என் குடோனுக்கு அனுப்பி வைக்கிறாயா, 10,000 ரூபாய் தருகிறேன் என மீண்டும் கேட்டிருக்கிறார்.

Also Read: சாதி வன்ம பேச்சு: சட்டீஸ்கர் முதலமைச்சரின் தந்தை கைது!

சட்டென கோவம் தலைக்கேறிய அந்த 33 வயது நபர், முதியவர் நாயக்கை கீழே தள்ளிவிட்டு தனது கடையின் ஷட்டரையும் சாத்திவிட்டு, முதியவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை கடையின் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டார். ஆகஸ்ட் 31ம் தேதி வரை முதியவரின் சடலம் கடையில் இருந்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி காலை 5 மணியளவில் முதியவரின் சடலத்தை பெட்ஷீட் ஒன்றினால் போர்த்தி சுற்றிவைத்து தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று அருகேயுள்ள குளம் ஒன்றில் சடலத்தை தூக்கி எறிந்துள்ளார். மேலும் முதியவரின் மொபைல் போன் மற்றும் துணிகளை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

Also Read: ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை – பெண்கள் புதுமையான போராட்டம்!

இதனிடையே ஆகஸ்ட் 29ம் தேதி மதியம் வீட்டை விட்டு சென்ற எனது தந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் முதியவர் நாயக்கின் தந்தை புகார் அளித்துள்ளார். முதியவரை கொலை செய்த கடைக்காரரும் அப்போது காவல்நிலையத்துக்கு உடன் சென்றிருக்கிறார்.

முதியவருக்கு சொத்துக்கள் அதிகமாக இருந்ததால் அவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இருந்த காவல்துறையினர் பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான் முதியவர் நாயக்கின் கடைக்கு சென்றதை அறிந்து அவரிடம் விசாரித்தனர். அதன் பின்பே முதியவரின் கொலை வெளிச்சத்துக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: