Home /News /national /

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு - பிரதமர் மோடி

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு - பிரதமர் மோடி

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு - பிரதமர் மோடி

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு - பிரதமர் மோடி

மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேசம் லக்னோவில் ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியி்ல் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நாட்டில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    நகரங்களில் 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வலுவான வீடுகள் இல்லாமல் சேரிகளில் வசித்த 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் (RERA) முக்கியமான நடவடிக்கை. இந்தச் சட்டம், முழு வீட்டுவசதித் துறையையும் அவநம்பிக்கை மற்றும் மோசடியிலிருந்து வெளியேற உதவியது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியது மற்றும் அதிகாரம் அளித்துள்ளது.

    அனைத்து சொத்துக்களும் வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன. இதில் சில மாற்றம் தேவை. இதன் மீது மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கை மூலம் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன மற்றும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது பல நிலைகளில் உள்ளன. இந்த வீடுகளில் நவீன வசதிகள் உள்ளன.

    எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி சேமிக்கின்றன. தற்போது, இந்த தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எல்இடி விளக்குகள், நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Public housing project

    அடுத்த செய்தி