ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடகா ஆளுநராகிறார் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெல்லாட்: 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் - மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படுமா?

கர்நாடகா ஆளுநராகிறார் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெல்லாட்: 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் - மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படுமா?

தாவர்சந்த் கெலாட்

தாவர்சந்த் கெலாட்

எட்டு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அரசு புதிய ஆளுநர்களை நியமனம் செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதிய நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநர்கள் அவர்களது அலுவலகத்தில் விரைவில் பொறுப்பேற்கவுள்ளனர். மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினருமான தாவர்சந்த் கெல்லாட் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரை ஆளுநராக நியமனம் செய்துள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  எட்டு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்கள்:

  1. மிசோரம் மாநில ஆளுநராக உள்ள பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  2.ஹரியானா மாநில ஆளுநராக உள்ள சத்யதேவ் நாராயன் ஆர்யா, திரிபுரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  3.திரிபுரா மாநில ஆளுநராக உள்ள ரமேஷ் பைஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  4.மத்திய அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெல்லாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  5. இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக உள்ள பன்டாரு தட்டார்யா ஹரியானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  6.ஹரி பாபு கம்பாம்படி மிசோரம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  7.மங்குபாய் சாகன்பாய் படேல் மத்திய பிரதேச மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  8.ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Governor