ஆந்திராவில் சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து... சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...

ஆந்திராவில் சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து...

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழந்தனர்.

 • Share this:
  ஆந்திராவில்  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசிக்க தமிழகத்திலிருந்து 15 பேர் டெம்போ வேனில் சென்றனர். சாமி தரிசனம் முடிந்து நெல்லூர் திரும்பிக் கொண்டிருந்த போது புச்சிரெட்டிபாளையம் எனும் பகுதியில் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.

  இந்த விபத்தில் வேனில் மொத்தம் 15 பேர் பயணித்த நிலையில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் சென்னை மற்றும்  பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க... நிறைவடைந்தது யானைகள் நல்வாழ்வு முகாம்... சொந்த ஊர் திரும்பிய யானைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் வரவேற்பு...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: