ஹோம் /நியூஸ் /இந்தியா /

நதியில் துர்கை அம்மன் சிலையைக் கரைக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 8 பேர் பலி; மூழ்கியவர்களைத் தேடும் பணி தீவிரம்!

நதியில் துர்கை அம்மன் சிலையைக் கரைக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளம் - 8 பேர் பலி; மூழ்கியவர்களைத் தேடும் பணி தீவிரம்!

நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காட்சி

நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காட்சி

மேற்கு வங்காளத்தில் மால் நதியில் துர்கை அம்மனின் சிலையைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பரபரப்பரப்பு காணொளி வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • West Bengal, India

  மேற்கு வங்காளத்தில் மால் நதியில் துர்கை அம்மனின் சிலையைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் மூழ்கிய நிலையில் 8 பேரில் உடல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்கித் தொலைந்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் துர்கை அம்மன் சிலைகளை நதியில் கரைப்பதற்காக நூற்றுக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நதியில் நின்று கொண்டிருந்த 8 பேர் மூழ்கியுள்ளனர். மேலும் பல பேர் வெள்ள நீரில் தொலைந்துள்ளனர்.

  இதில் பரிதாபமாக 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்த நிலையில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  Also Read : ஸ்பிரைட், பெச்சி தான் குடிப்பேன்.. ஒரு கிராம மக்களின் செல்ல பிள்ளையாக மாறிய 'கேசு'

  இந்த நிலையில் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காணொளி வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்வது பதிவாகியுள்ளது.

  இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் இரங்கலை தெரிவித்ததுள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரமும் நிவார தொகையாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகமும் அதே தொகையை அறிவித்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Accident, Lake