ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு!

ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு!

கோப்பு படம்

கோப்பு படம்

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் (NZP) எட்டு ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸால் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் (NZP) எட்டு ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சிங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பாசிட்டிவ் வந்தது என்று ஏப்ரல் 29ம் தேதி அன்று செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) NZP அதிகாரிகளுக்கு வாய்வழியாக கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், NZP இன் கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கவும் வில்லை, அதேசமயம் சிங்கங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதியாக அறிவிக்கவும் இல்லை.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “சிங்கங்கள் கோவிட் அறிகுறிகளைக் காட்டின என்பது உண்மைதான். ஆனால் CCMB-யிடமிருந்து ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கைகளை நான் இன்னும் பெறவில்லை. எனவே இப்போது இதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது. மேலும் பூங்காவில் சிங்கங்கள் சிறப்பாகவே செயல்ப்பட்டு வருகின்றன, ” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி நகரத்தின் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (WRTC) இயக்குனர் டாக்டர் ஷிரிஷ் உபாதி கூறியதாவது, "நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எட்டு புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன. இருப்பினும் காட்டு விலங்குகளில் இதுபோன்ற பாதிப்புகள் இருப்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஹாங்காங்கில், வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.

Also read... திருமண நிகழ்வில் நுழைந்து கன்று ஈன்ற பசு.. ஆஸ்திரேலியாவில் ருசிகர சம்பவம்

ஆதாரங்களின்படி, விலங்கியல் பூங்காவில் பணிபுரியும் வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களிடையே பசியின்மை, நாசி வெளியேற்றம் மற்றும் இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளைக் கவனித்தனர். 40 ஏக்கர் சஃபாரி பகுதியில் சுமார் 10 வயதுடைய 12 சிங்கங்கள் உள்ளன. அதில் தலா நான்கு ஆண்களும் பெண்களும் கொரோனா சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளன.

முதலில் சதேகத்தின் பேரில் பூங்காவில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் அவசர அழைப்பு பட்டனை அழுத்திய பின்னர், அவற்றின் மாதிரிகளை எடுக்குமாறு நிர்வாகம் அவர்களுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து கால்நடை அதிகாரிகள் சிங்கங்களின் ஓரோபார்னீஜியல் (மென்மையான அண்ணம் மற்றும் ஹையாய்டு எலும்புக்கு இடையில் உள்ள குரல்வளையின் ஒரு பகுதி) மாதிரிகளை எடுத்து ஹைதராபாத்தில் உள்ள CCMB-க்கு அனுப்பி, அதனுடன் NZP ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள கால்நடைகளில் மருத்துவர்களில் ஒருவர் தான் எஸ்.ஏ. அசாதுல்லா என்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவருக்கு பலமுறை அழைப்பு விடுத்த போதிலும், அசாதுல்லா பதிலளிக்கவில்லை. இந்தநிலையில் இந்த வைரஸின் திரிபு மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு வந்திருக்கிறதா என்பதை அறிய CCMB விஞ்ஞானிகள் மரபணு வரிசைமுறை செய்வார்கள் என்று விலங்கியல் பூங்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக MoEFCC, CCMB விஞ்ஞானிகள், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZA) மற்றும் NZP அதிகாரிகளின் விர்ச்சுவல் கூட்டம் ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது என்பதையும் TOI பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... 

அந்த கூட்டத்தில் சிங்கங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த மருத்துவர் குக்ரெட்டி கூறியதாவது, "சிங்கங்களில் பாதிப்பு ஏப்ரல் 30ம் தேதி நாட்டின் முக்கிய வனவிலங்கு வார்டன்களுக்கு ஒரு விரிவான ஆலோசனையை வழங்குவதற்கான தூண்டுதலாக இருந்தது. மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு வைரஸ் பரவுகிறது என்று அஞ்சப்படுவதால், அனைத்து தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் புலி இருப்பிடங்களை மூடுமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறினார்.

சிங்கங்கள் பாதிக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு நேரு விலங்கியல் பூங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இது மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருப்பதால், பூங்காவிற்கு அருகே வசிக்கும் மக்களிடமிருந்து காற்றின் மூலம் வைரஸ் சிங்கங்களுக்கு பரவியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது விலங்கியல் பூங்காவின் பராமரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது பணியாளர்களிடமிருந்தோ வைரஸ் பரவியிருக்கலாம் என்று பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் சமீபத்தில் 25க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Covid-19, Lion