Home /News /national /

குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்

குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்

குவைத்

குவைத்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குவைத் நாட்டில் வேலை செய்யும் 8 லட்சம் இந்தியர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. 

    அரபு நாடுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கும் வெளிநாட்டவருக்கான சலுகை மசோதா வரைவுக்கு குவைத் நாட்டின் தேசிய சட்டமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழு, இந்த மசோதா சட்டப்பூர்வமானது என்று தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவின் அடிப்படையில், ‘குவைத் மக்கள் தொகையில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இந்தியர்கள் இருக்கக் கூடாது.

    இதன்மூலம், 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குவைத்தில் இருக்கக் கூடிய வெளிநாட்டினரில் இந்தியர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருந்துவருகின்றனர். 14.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தின் மொத்த மக்கள் தொகை 43 லட்சமாக உள்ளது. அதில், குவைத் நாட்டினர் 13 லட்சம் பேர். வெளிநாட்டினர் 30 லட்சம் பேர் உள்ளனர்.

    எண்ணெய் விலை உயர்வும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாலும் வெளிநாட்டவரை வெளியேற்ற வேண்டும் என்று கோஷம் எழுந்தது. கடந்த மாதம், குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் ஷாபா, வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி