Home /News /national /

பாகுபலி சமோசா… 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் ₹50,000 பரிசு..!

பாகுபலி சமோசா… 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் ₹50,000 பரிசு..!

பாகுபலி சமோசா

பாகுபலி சமோசா

Bahubali Samosa : மீரட்டில் இருக்கும் 'கௌஷல் ஸ்வீட்ஸ்' கடையில் போடும் ஒரு சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ₹ 50000 ரூபாய் பரிசாக வழங்குகின்றனர்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா போட்டியை பார்த்திருப்போம். அது போல் நம் ஊர்களிலும் சாப்பாட்டு போட்டி வைத்து பார்த்திருப்போம். சமோசா வைத்து போட்டி வைத்து பார்த்திருக்கிறீர்களா…

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் இருக்கும் குர்தி பசாரில் 'கௌஷல் ஸ்வீட்ஸ்' என்று ஒரு கடை உள்ளது. அங்கே தான் இந்த போட்டி நடக்கிறது. இவர்கள் கடையில் போடும் ஒரு சமோசவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ₹ 50000 ரூபாய் பரிசாக வழங்குகின்றனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

சமோசா என்றதும் எல்லோர் வாயிலும் எச்சில் ஊறும். அதுவும் வட இந்தியர்களுக்கு சொல்லவே வேண்டாம். அவர்கள் சமோசா பிரியர்கள். அப்போது ஏன் சாப்பிட முடியவில்லை. காரணம் அதன் அளவு தான்.  சமோசா என்றதும் நம்ம ஊர் கடையில் பார்த்த முக்கோணமான, கையடக்க சமோசா தானே. அது என்ன அசால்டாக சாப்பிட்டுவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள். இது 8 கிலோ எடை கொண்ட ஒற்றை சமோசா.



இது குறித்து கடையின் உரிமையாளர் சுபம் கூறியுள்ளதாவது, 'எங்களது இந்த கடையை மக்களிடையே பிரபலப்படுத்த என்ன செய்யலாம் என்று எண்ணினோம். அப்போது தான் ஒரு ஐடியா தோன்றியது. முதலில் ஒரு 4 கிலோ எடை கொண்ட சமோசாவை தயாரித்தோம். இப்போது 8 கிலோ எடைகொண்ட சமோசாவை தயாரித்து வருகிறோம். இதை ஒற்றை ஆளாக 30 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு என்று அறிவித்தோம். இது இங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.'

சார்.. வீட்ல ’சின்ன பின் சார்ஜர்’ இல்லையா? - இலங்கை அதிபர் கோத்தபயவிடம் இன்ஸ்டாவில் நக்கலடித்த நபர்

8 கிலோ பாகுபலி சமோசாவின் விலை ₹ 1100 ஆகும். ஆனால் இன்று வரை இந்த சமோசாவை யாரும் சாப்பிட்டு முடிக்கவில்லை. அடுத்ததாக 10 கிலோ எடை கொண்ட சமோசாவை தயாரிக்க  முடிவு செய்துள்ளனர்.

உங்களால் அந்த சமோசாவை சாப்பிட முடியுமா? மீரட் சென்று அதை சாப்பிட்டு வட இந்தியாவை ஒரு மிரட்டு மிரட்டத் தயாரா..? அப்படினா மீரட் பக்கம் வண்டியை விடுங்கள்…
Published by:Ilakkiya GP
First published:

Tags: Food, Uttar pradesh

அடுத்த செய்தி