குற்றவாளியைப் பிடிக்க சென்ற இடத்தில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற டிஎஸ்பி உட்பட 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியைப் பிடிக்க சென்ற இடத்தில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு
சுடப்பட்ட போலீசார் கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது
  • Share this:
உத்தரபிரதேசத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சந்தோஷ் சுக்லா என்பவர் ரவுடிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபா என்பவர் கான்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத சூழலில் ரவுடிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், டிஎஸ்பி தேவேந்திர மிஷ்ரா உட்பட 8 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


 

மேலும் படிக்க: சென்னையில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வறிக்கை

படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading