Home /News /national /

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

காட்சி படம்

காட்சி படம்

ரயில்வே துறையைச் சார்ந்த 14 லட்சம் ஊழியர்கள் இந்த நடவடிக்கையின் மூலமாக பலன் அடைய உள்ளனர்.

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போதைய ஏப்ரல் மாதத்தில், 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது. அனைத்து மத்திய அரசுப் பணியாளர்களும் பலன் அடையும் வகையில் அகவிலைப்படியை மத்திய அரசு அண்மையில் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்திருந்தது.

அதன்படி, அகவிலைப்படி உயர்வை ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குமாறு அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில்வே துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஏப்ரல் மாத இறுதியில் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையைச் சார்ந்த 14 லட்சம் ஊழியர்கள் இந்த நடவடிக்கையின் மூலமாக பலன் அடைய உள்ளனர்.

மொத்தம் 50 லட்சம் ஊழியர்களுக்கு பலன்…

முன்னதாக, 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்திக் கொள்ள மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அந்த நடவடிக்கையின் மூலமாக 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

also read : சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி! பரோல் வழங்கிய ராஜஸ்தான் நீதிமன்றம்

ஓய்வூதியதாரர்களுக்கும் பலன்:

ஓய்வூதியதாரர்களுக்குமான அகநிவாரண படியை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஓய்வூதியம் பெற்று வரும் 65 லட்சம் பேர் இதன் மூலமாக பலன் அடைய உள்ளனர். தொழில்துறை பணியாளர்களுக்காக, அனைத்து இந்திய கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் நிர்ணயம் செய்யும் பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகநிவாரண படி நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் நடவடிக்கையை, மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அங்கு இதற்கு முன்பு 24.50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை 27.25 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது. குறிப்பாக, 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து அகவிலைப்படி கிடைக்க உள்ளது.

பொதுவாக ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்த முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்கின்றன. அதாவது, ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் தாமதம் ஏற்படும்போது, சில சமயங்களில் முன் தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் எவ்வளவு என்பதைப் பொறுத்து, அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Central government

அடுத்த செய்தி