Home /News /national /

சுதந்திர தினத்திற்காக வெளியிடப்படும் மெய்நிகர் 3டி தபால்தலைகள்

சுதந்திர தினத்திற்காக வெளியிடப்படும் மெய்நிகர் 3டி தபால்தலைகள்

மெய்நிகர் 3டி தலைகள்

மெய்நிகர் 3டி தலைகள்

Zionverse இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சியோன்வர்ஸ் நிறுவனம் NFT எனப்படும் மெய்நிகர் வணிக பரிமாற்ற 3டி ஸ்டாம்புகளில் இந்தியத் தலைவர்களின் தலைகள் வருமாறு உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஒவ்வொரு ஆண்டும்  நாட்டின் முக்கிய நிறுவனங்கள், தலைவர்களுக்காக  இந்திய அஞ்சல் துறைத் தபால் தலைகளை வெளியிடும். வித்தியாசமாக, இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்திற்காக இந்திய ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் ஒன்று  மெய்நிகர் 3டி தலைகளை வெளியிடஉள்ளது.

டோட்டலிட்டி கார்பொரேஷன் மெய்நிகர் விளையாட்டு மெட்டாவர்ஸ் என அறியப்படும் நிறுவனம், சியோன்வர்ஸ்(Zionverse). இந்திய கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகளையும், மெய்நிகர் வணிக செயல்பாடுகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சியோன்வர்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் சிறப்பு அம்சமான NFT எனப்படும் மெய்நிகர் வணிக பரிமாற்ற பொருட்களில் ஒன்றான 3டி ஸ்டாம்புகளில் இந்தியத் தலைவர்களின் தபால் தலைகள் வருமாறு உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

சுதந்திர தினத்திற்காக மூவண்ண ஒளியில் மிளிரும் இந்தியாவின் முக்கிய சின்னங்கள்!

இதன் வெளியீடு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட வெளியீடு விடுதலை போராளிகளின் 3டி ஸ்டாம்ப் ஸ்டைலில் உள்ள NFTகள், Zionverse தளத்தில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆகஸ்ட் 15 அன்று காட்சிப்படுத்தப்படும். அதில் இருந்து விருப்பட்ட ஸ்டாம்புகளை அதன் உறுப்பினர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

முதல் கட்ட வெளியீட்டில் மொத்தம் 27775 மெய்நிகர் தலைகளை வெளியிடுகிறது. இந்த NFT களில் ஷஹீத் பகத்சிங், ராணி லக்ஷ்மி பாய், பி.ஆர்.அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் மகாத்மா காந்தி ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தலைகள் அடங்கும்.



இது மேலும் ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரருக்கும் அரிய, அல்ட்ரா அரிய, பொதுவான மற்றும் விண்டேஜ் பதிப்பு என 4 வகையான NFT களாக வகைப்படுத்தி வெளியிடுகிறது. தனித்துவமான 75 NFTகள் சியோன்வெர்ஸில் அதிகபட்ச பரிந்துரை பதிவுகளைப் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
Published by:Ilakkiya GP
First published:

Tags: Independence day, Metaverse

அடுத்த செய்தி