ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியர்கள் அனைவரும் இந்த 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

இந்தியர்கள் அனைவரும் இந்த 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி கூறிய 5 உறுதிமொழிகள்

பிரதமர் மோடி கூறிய 5 உறுதிமொழிகள்

நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஐந்து உறுதிமொழிகளை ஏற்று, நமது விடுதலை வீரர்களின் கனவுகளை நனவாக்க பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஐந்து உறுதிமொழிகளை ஏற்று, நமது விடுதலை வீரர்களின் கனவுகளை நனவாக்க பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண  கொடியை ஏற்றினார்.

  தேசிய கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காக போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை  நனவாக்க வேண்டிய கடமை, நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது எனப் பேசினார்.

  பின்னர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.நாட்டின் வளர்ச்சி, காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை நீக்குதல், நமது வேர்களின் பெருமைகள் உணர்தல், நாட்டு மக்களிடையே ஒற்றுமை, குடிமக்கள் தனது கடமைகளை உணர்தல் ஆகியவையே இந்த ஐந்து உறுதி மொழி.

  1. முதல் உறுதிமொழியாக இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக உருவாக வேண்டும். இதற்காக நாட்டின் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும்.

  2. இரண்டாவது உறுதிமொழியாக நம்மிடம் இருக்கும் காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை நாம் முற்றிலுமாக அழிக்க வேண்டும்.அனைத்து விஷயங்களுக்கும் நாம் உலகின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க கூடாது. நாம் நமது நாட்டின் பெருமையை உணர வேண்டும். சிலர் தங்களின் திறமைக்கு மொழியை தடையாக உணரலாம். ஆனால், நாம் நமது அனைத்து மொழிகளையும் பெருமையாக கொள்ள வேண்டும்.

  3. மூன்றாவது உறுதி மொழியாக, நாம் நமது பாரம்பரியத்தின் மீது பெருமை கொள்ள வேண்டும்.  நமது வேர்களின் மீது உறுதியான தொடர்பு வைத்திருந்தால் தான் நாம் உயர பறக்க முடியும். நாம் உயர பறந்தால் நாம் உலகிற்கே வழிகாட்டியாக இருந்து உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்க முடியும்.

  இதையும் படிங்க: சுதந்திர தினத்திற்காக மூவண்ண ஒளியில் மிளிரும் இந்தியாவின் முக்கிய சின்னங்கள்!

  4. நான்காவதாக நாட்டு மக்களிடையே ஒற்றுமை என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். நம் நாடு தான் முதன்மை என்ற மந்திரத்தை நாம் மனதில் கொண்டு ஒற்றுமையோடு முன்னேற வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் சமத்துவத்தையும் ஒற்றுமையையும்  உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு உரிய முக்கியத்துவம், மரியாதை வழங்கி நாட்டின் வளர்சிக்கு பெண் சக்தியை முக்கிய தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  5. ஐந்தாவது உறுதி மொழியாக குடிமக்களின் கடமை என்பதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும். கடமை சாதாரண மக்கள் என்று அல்லாமல் என்பது பிரதமர், முதலமைச்சர் என நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும். எந்தவொரு நாடும் கடமையை பின்பற்றும் ஒழுக்கமான குடிமக்கள் மூலமாகத் தான் வளர்ச்சி அடையும். உதாரணமாக நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம், நீர் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமை. அதேபோல், இவற்றை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தி சேமித்து வைப்பது குடிமக்களின் கடமை. இதை முறையாக செய்தால் நாம் எதிர்பார்க்கும் இலக்குகளை எளிதாக எட்ட முடியும்.

  இவ்வாறு ஐந்து உறுதிமொழிகள் குறித்து பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Independence day, PM Modi, PM Narendra Modi