Home /News /national /

75ஆவது சுதந்திர தின விழா - பிரதமர் மோடி உரையின் 10 முக்கிய அம்சங்கள்

75ஆவது சுதந்திர தின விழா - பிரதமர் மோடி உரையின் 10 முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்

தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் பத்து முக்கிய அம்சங்கள் இதோ.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

    தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் பத்து முக்கிய அம்சங்கள் இதோ:
    நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினம் இந்தியாவின் புதிய தொடக்கமாகும்.
    இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
    வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களை இந்தியா தற்போது நினைவு கூர்ந்து வருகிறது.மங்கல் பாண்டே தொடங்கி பிஸ்மில், பகத் சிங் போன்ற புரட்சியாளர்களும், பழங்குடியின தலைவர்களான பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜு என நாட்டின் விடுதலைக்காக அனைத்து தரப்பிலும் தலைவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளனர்.
    இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை தற்போது மாறியுள்ளது. இந்தியாவை தற்போது உலகம் பெருமையுடன் பார்க்கிறது. உலகின் பிரச்சனைகளுக்கு இந்தியாவில் தீர்வு கிடைக்கும் என உலகம் நம்புகிறது.
    இந்தியா தனது பழமையான அடிமை மனோபாவம் அதன் தாக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். அடிமை எண்ணத்திற்கு நாம் முடிவுரை எழுத வேண்டும். நமது வேர்களின் பெருமைகளை நாம் உணர்ந்து அவற்றை அங்கீகரித்து இது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும்.
    இந்தியா தற்போது உத்வேகம் கொண்ட சமூகமாக திகழ்கிறது. 130 கோடி இந்தியர்கள் தான் இந்தியாவின் சொத்து. இந்த உத்வேகத்தை கொண்டு இந்தியா வளர்ந்த நாடாக முன்னேறி உலகிற்கே வழிகாட்டியாக திகழ வேண்டும்.
    நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகள் ஏற்க வேண்டும்.நாட்டின் வளர்ச்சி, காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை நீக்குதல், நமது வேர்களின் பெருமைகள் உணர்தல், நாட்டு மக்களிடையே ஒற்றுமை, குடிமக்கள் தனது கடமைகளை உணர்தல் ஆகியவையே இந்த ஐந்து உறுதி மொழி.
    நாட்டின் அனைத்து குடிமக்களும் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். பெண்களை உரிய மரியாதை தராமல் அவமதிக்கும் மனோபாவம் சமூகத்தில் எப்படியோ புகுந்து விட்டது. இதை நீக்கி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம், மரியாதை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு பெண் சக்தி முக்கிய தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
    ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை தான் இந்தியா எதிர்கொள்ளும் இரு பெரும் சவால்கள். ஊழலுக்கு எதிரான இந்த போரில் வெற்றிகரமாக செயல்பட நாட்டு மக்களின் ஆசி எனக்கு தேவை. அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் வாரிசு கலாசாரத்தை நீக்க வேண்டியது நமது சமூக கடமை.
    அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும். இதற்காக நாட்டின் இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Independence day, PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி