Home /News /national /

அடிமை மனோபாவத்திற்கு முடிவுரை எழுதி, நமது பெருமைகள் குறித்து கர்வம் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

அடிமை மனோபாவத்திற்கு முடிவுரை எழுதி, நமது பெருமைகள் குறித்து கர்வம் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

அடிமை மனோபாவத்திற்கு முடிவுரை எழுத வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு

அடிமை மனோபாவத்திற்கு முடிவுரை எழுத வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு

இந்தியா தனது பழமையான அடிமை மனோபாவம் அதன் தாக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அனைத்து விஷயங்களிலும் பிறரின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் அடிமை மனோபாவத்தில் இருந்து விடுபட்டு நமது பெருமைகளை உணர்ந்து அது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றினார்.

    தேசிய கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காக போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நாம் நனவாக்க வேண்டிய கடமை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது.

    இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை தற்போது மாறியுள்ளது. இந்தியாவை தற்போது உலகம் பெருமையுடன் பார்க்கிறது. உலகின் பிரச்சனைகளுக்கு இந்தியாவில் தீர்வு கிடைக்கும் என உலகம் நம்புகிறது. கொரோனா பேரிடரை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு அதில் வெற்றிகொண்டது ஒரு சிறந்த உதாரணம்.


    இந்தியா தனது பழமையான அடிமை மனோபாவம் அதன் தாக்கங்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். அடிமை எண்ணத்திற்கு நாம் முடிவுரை எழுத வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் மேற்கு நாடுகளின் அங்கீகாரத்தை  எதிர்பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும். நமது வேர்களின் பெருமைகளை நாம் உணர்ந்து அதை ஆதாரமாகக் கொண்டு உயர்ந்து வளர வேண்டும். நம்மிடம் எத்தனையோ பெருமை மிக விஷயங்கள் உள்ளன. நமது பெருமைகளை அங்கீகரித்து அவை குறித்து  பெருமிதம் கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: சுதந்திர தினத்திற்காக மூவண்ண ஒளியில் மிளிரும் இந்தியாவின் முக்கிய சின்னங்கள்!

    நாட்டின் புதிய கல்வி கொள்கை இதை நிறைவேற்றும் என நான் நம்புகிறேன். இந்தியா தற்போது உத்தவேகம் கொண்ட சமூகமாக திகழ்கிறது. 130 கோடி இந்தியர்கள் தான் இந்தியாவின் சொத்து. இந்த உத்வேகத்தை கொண்டு இந்தியா வளர்ந்த நாடாக முன்னேறி உலகிற்கே வழிகாட்டியாக திகழ வேண்டும்" என உரையில் தெரிவித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Independence day, PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி