Home /News /national /

ஜனநாயகத்தின் தாய் இந்தியா - மூவர்ண கொடியை ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

ஜனநாயகத்தின் தாய் இந்தியா - மூவர்ண கொடியை ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை

செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை

PM Modi Independence day Speech - நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவில் கொண்டு அவர்கள் கனவுகளை நனவாக்க வேண்டிய தருணம் இது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி  தேசியக் கொடியை ஏற்றினார்.

    தேசிய கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினம் இந்தியாவின் புதிய தொடக்கமாகும்.

    இன்றைய தினம் நாம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முன்னோர்களை, தியாகிகளை நினைவு கூர வேண்டிய தருணம்.அவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காக கொண்ட கனவுகளை நனவாக்க வேண்டிய கடமை. நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அன்னல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாஹேப் அம்பேத்கர், சாவர்க்கர், நேரு, சர்தார் படேல், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள்.

    வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களை இந்தியா தற்போது நினைவு கூர்ந்து வருகிறது. மங்கல் பாண்டே தொடங்கி பிஸ்மில், பகத் சிங் போன்ற புரட்சியாளர்களும், பழங்குடியின தலைவர்களான பிர்சா முண்டா, அல்லூரி சீதாராம ராஜு,  ராணி லக்ஷ்மி பாய், சென்னம்மா, பாரதி, ஜெயபிரகாஷ் நாராயன் என நாட்டின் விடுதலைக்காக அனைத்து தரப்பிலும் தலைவர்கள் முன்னின்று வழிநடத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆகஸ்ட்15-ஆம் தேதி சுதந்திர தினமாக தேர்வு செய்யப்பட்டது ஏன்? முழு தகவல்

    இதில் பெண் வீரர்கள் பலரும் அடக்கம். பெண்களின் வீர தீரத்தை நாம் ஒரு போதும் மறவாமல் நினைவு கூர வேண்டும். இத்தகைய பெரும் தலைவர்களை இந்தியா கொண்டிருப்பதை நாம் பெருமை கொள்ள வேண்டும்."இவ்வாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்வதாகவும் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

     
    Published by:Kannan V
    First published:

    Tags: Independence day, PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி