Home /News /national /

'ஊழல் மற்றும் வாரிசு கலாசாரம்' தான் இந்தியாவின் இரு பெரும் சவால்கள்..பிரதமர் மோடி பேச்சு

'ஊழல் மற்றும் வாரிசு கலாசாரம்' தான் இந்தியாவின் இரு பெரும் சவால்கள்..பிரதமர் மோடி பேச்சு

ஊழல், வாரிசு கலாசாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சு

ஊழல், வாரிசு கலாசாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சு

ஊழலுக்கு எதிரான இந்த போரில் வெற்றிகரமாக செயல்பட நாட்டு மக்களின் ஆசி எனக்கு தேவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவை தான் இந்தியா எதிர்கொள்ளும் இரு பெரும் சவால்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது.  சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றினார்.

    தேசிய கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நாட்டின் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாவது, "ஊழல் என்பது கரையான் போல நாட்டின் வளர்ச்சியை சேதப்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து நாம் போராட வேண்டும். ஊழலை தடம் தெரியாமல் நாம் துடைத்தெறிய வேண்டும்.எனவே, ஊழல் மற்றும் ஊழல்வாதிகளை மக்கள் கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஊழல்வாதிகளை சமூகம் ஒன்றிணைந்து தண்டிக்க வேண்டும். ஊழல் செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நான் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். ஊழலுக்கு எதிரான இந்த போரில் நாட்டு மக்களின் ஆசி எனக்கு தேவை.

    அதேபோல் வாரிசு அரசியலும் நாட்டின் பல்வேறு துறைகளை சீரழித்து வருகிறது. நமது பல துறைகளில் வாரிசு அரசியல் புகுந்து உண்மையான திறமைகளுக்கு தடையாக உள்ளன. குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொண்டவர்கள் நாட்டின் நலன்கள் பற்றி கவலைப்பட மாட்டர்கள். எனவே, அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் வாரிசு கலாசாரத்தை நீக்கி வெளிப்படையான சூழலை உருவாக்க வேண்டும். இது நமது சமூக கடமை." இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியர்கள் அனைவரும் இந்த 5 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு

    தனது சுதந்திர தின உரையில் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதிமொழிகள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.நாட்டின் வளர்ச்சி, காலனி ஆதிக்க அடிமை மனோபாவத்தை நீக்குதல், நமது வேர்களின் பெருமைகள் உணர்தல், நாட்டு மக்களிடையே ஒற்றுமை, குடிமக்கள் தனது கடமைகளை உணர்தல் ஆகியவையே இந்த ஐந்து உறுதி மொழி என அவர் கூறினார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corruption, Independence day, PM Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி