ஹோம் /நியூஸ் /இந்தியா /

75வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்

75வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

75th Independence Day: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ள, ட்ரோன்களை கண்டறியும் நவீன இயந்திரத்தின் மூலம், செங்கோட்டை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில், காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

  நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றவுள்ளார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் செங்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்து 400 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ள, ட்ரோன்களை கண்டறியும் நவீன இயந்திரத்தின் மூலம், செங்கோட்டை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் பறக்கும் ட்ரோன்களை செயலிழக்க வைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

  இதையும் படிங்க: ஆகஸ்ட் 15-ல் சுதந்திரமடைந்த மற்ற நாடுகள்.. என்னென்ன தெரியுமா?

  டெல்லியில் காவல்துறையினர் மூவண்ண உடையணிந்து தேசியக் கொடியை ஏந்தி சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். டெல்லியில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூறும் விதமாக அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பியூஷ் கோயல் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Independence day, India, PM Narendra Modi