வேலைவாய்ப்புகளில் கன்னட மக்களுக்கு 75% இடஒதுக்கீடு - சட்டம் கொண்டு வரும் கர்நாடகா

வேலைவாய்ப்புகளில் கன்னட மக்களுக்கு 75% இடஒதுக்கீடு - சட்டம் கொண்டு வரும் கர்நாடகா
எடியூரப்பா
  • News18
  • Last Updated: February 7, 2020, 10:29 AM IST
  • Share this:
கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னட மக்களுக்கு 75 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டுவர உள்ளதாக மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில், தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

யாருக்கும் பாகுபாடு காட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். கன்னடர்களின் நலன் கருதியே இந்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், இதற்கான மசோதா விரைவில் இறுதிசெய்யப்படும் என்றும் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.


Also see...
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading