Home /News /national /

மகாராஷ்டிரா அமைச்சர்களில் 75% பேர் மீது குற்ற வழக்குகள்- அறிக்கையில் தகவல்

மகாராஷ்டிரா அமைச்சர்களில் 75% பேர் மீது குற்ற வழக்குகள்- அறிக்கையில் தகவல்

மகாராஷ்டிரா அமைச்சர்கள்

மகாராஷ்டிரா அமைச்சர்கள்

மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களில் 75 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழங்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மகாராஷ்டிராவில் பா.ஜ.க மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்து வருகிறார். பா.ஜ.க சார்பில் தேவேந்திரநாத் பட்னவிஸ் துணை முதல்வராக உள்ளார். கடந்த 9-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டப் பிறகு மகாராஷ்டிராவில் தற்போது முதல்வரையும் சேர்த்து 20 அமைச்சர்கள் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டப் பிறகு, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது அமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 75 சதவீதம் அதாவது 15 அமைச்சர்கள் அவர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

13 பேர் அவர்களது மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் கோடிஸ்வரர்களாக உள்ளனர். அவர்களது சராசரி சொத்துமதிப்பு 47.45 கோடி ரூபாயாக உள்ளது. அதில் வெளியான தகவலின்படி, அதிகபட்ச சொத்துமதிப்பு கொண்ட அமைச்சராக மங்கல் பிரபாத் லோதா உள்ளார். அவரது சொத்து மதிப்பாக 441.65 கோடி ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளார். அமைச்சர் புமேரே சண்டிபன்ராவ் குறைந்த சொத்து மதிப்பைக் காட்டியுள்ளார்.

அவர், 2.92 கோடி ரூபாய் சொத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. 8 அமைச்சர்கள் அவர்களது கல்வித் தகுதி 10 - 12-ம் வகுப்பு என்று குறிப்பிட்டுள்ளனர். 11 பேர் இளங்கலை அல்லது அதற்கு மேல் என்று குறிப்பிட்டுள்ளனர். நான்கு அமைச்சர்கள் 41 - 50 வயதுக்கு இடைப்பட்டவர்களாக உள்ளனர். மீதமுள்ளவர்கள் 51 - 70 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
Published by:Archana R
First published:

Tags: Maharashtra

அடுத்த செய்தி