முகப்பு /செய்தி /இந்தியா / பள்ளி கழிப்பறையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் கைதான 72 வயது முதியவர்!

பள்ளி கழிப்பறையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் கைதான 72 வயது முதியவர்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை அழுதுகொண்டே தெரிவிக்க பெற்றோரும், உறவினர்களும் அந்த முதியவர் மோகன்லாலை பிடித்து ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rajasthan, India

72 வயது முதியவர் ஒரு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள கனோட் காவல் நிலையப் பகுதியில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 72 வயது முதியவரான மோகன்லால் ரேகார் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்த சிறுமி தனியாக இருந்ததை கவனித்த அந்த முதியவர், அங்குள்ள பள்ளி ஒன்றின் கழிவறையில் சிறுமியை பலவந்தமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சம்பவத்திற்கு பின்னர் சிறுமி தனது வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் அழுது கொண்டே தனக்கு நேர்ந்த அவலத்தை விவரித்துள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் அந்த முதியவர் மோகன்லாலை பிடித்து ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதற்குள் காவல்துறையின் கவனத்திற்கு இச்சம்பவம் சென்ற நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட மோகன்லாலை பிடித்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

First published:

Tags: Crime News, Pocso, Rajasthan, Rape