ஹோம் /நியூஸ் /இந்தியா /

71% இந்தியர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை!

71% இந்தியர்களுக்கு ஆரோக்கிய உணவு கிடைப்பதில்லை!

ஆரோக்கிய உணவுப் பற்றாக்குறை

ஆரோக்கிய உணவுப் பற்றாக்குறை

Non affordability of healthy food: 71% சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதன் உலக சராசரி 42 சதவீதம் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மனிதனின் அத்தியாவசிய தேவையே உணவு ,உடை, இருப்பிடம் தான். மனிதன் ஓடி ஓடி உழைப்பதே இந்த ஜான் அளவு வயிற்றுக்கே என்றும் சொல்லும்போது அந்த உணவே பற்றாக்குறையாய் அமைந்து கொத்துக் கொத்தாக மனிதர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தால் இந்த உலகம் என்ன வளர்ச்சி நிலை அடைந்துள்ளதாகக் கருத முடியும்?

சராசரியாக ஒரு  நாளைக்கு ஆண்கள் 2600 கலோரிகளும் பெண்கள் 2000 கலோரிகள் உள்ள உணவையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது தான் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வழிநடத்த முடியும். அதே சமயம் ஒரு நபரின் உணவிற்கான செலவு, வருமானத்தின் 63% விட அதிகமாக இருந்தால் ஆரோக்கியமான உணவு வாங்க முடியாததாகி விடுகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSI) மற்றும் டவுன் டு எர்த் பத்திரிகை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, 71% சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் உலக சராசரி 42 சதவீதம் ஆகும்.

ஒரு சராசரி இந்தியரின் உணவில் பொதுவாக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் போதுமான அளவுகளில் இல்லை. மீன், பால் மற்றும் இறைச்சியின் நுகர்வு ஓரளவு தேவையான அளவு உள்ளது. இவ்வாறு ‘உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை, 2021’ தெரிவித்துள்ளது.

மேலும் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு சுவாசக் கோளாறுகள், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை பற்றியும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரும்பான்மையான இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை ஏன் வாங்க முடியவில்லை?

உலக அளவில் உள்ள உணவுப் பரிந்துரையின்படி 300 கிராம் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் 168.7 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 200 கிராம் பழங்களை உட்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் 35.8 கிராம் தான் சாப்பிடுகின்றனர்.

அதேபோல, அவர்கள் ஒரு நாளைக்கு 24.9 கிராம் (இலக்கு 25%) பருப்பு வகைகளையும், 3.2 கிராம் (இலக்கு 13%) கொட்டைகளையும் உட்கொள்கின்றனர்.

இளைஞர்களின் கனவை நனவாக்க 'ஜன் சமர்த்' கைகொடுக்கும் - பிரதமர் மோடி

"சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உணவு முறைகள் ஆரோக்கியமாக இல்லை. கூடுதலாக, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்துகொண்டே வருகிறது" என்று அறிக்கை கூறுகிறது.

ஆரோக்கியமான உணவுப்பொருட்களின் விநியோகம் குறைவாக உள்ளது. மேலும் அதை வாங்கி உண்ணும் வசதியும் இந்தியர்களிடம் குறைவாக இருக்கின்றது.

பணவீக்கம் உணவுப் பொருட்களின் விலையை எவ்வாறு பாதிக்கிறது?

கடந்த ஆண்டில், நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) 327% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் CFPI ஐ உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) -- 84% உயர்வைக் கண்டுள்ளது.

"உணவு என்பது CPI பணவீக்கத்தின் மிகப்பெரிய பங்காகத் தெரிகிறது. உணவுப் பணவீக்கத்தின் தற்போதைய உயர் நிலைகள் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சர்வதேச பயிர்களின் விலை உயர்வு மற்றும் தீவிர வானிலை தொடர்பான இடையூறுகளால் பாதிக்கப்படுகின்றன. இவை மனிதர்களின் உணவு நுகர்வில் பெரிய மாற்றத்தையும் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறன.

"உண்மையில், CRISIL தரவுகளின் பகுப்பாய்வு மார்ச்-ஏப்ரல் 2022 இல் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உணவு விலைகள் அதிக விகிதத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது" என்று வல்லுநர் கூறுகின்றனர்.

தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று  பாரதி சொன்ன இதே மண்ணில் வாழும் மக்கள் பாதி வயிற்றுடன் எதிர்ப்பு சக்தி குன்றி நோய்களுக்கு அதிகம் ஆளாகும் நிலையில் வாடி வருவதாக தேசிய அறிக்கைக் குறிப்பிட்டுள்ளது.

உணவுப்பாதுகாப்புச் சட்டங்கள், நியாயவிலைக் கடைகள், சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ள நாட்டில் 71% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அது சிந்தனைக்கும், ஆய்விற்கும், அவசர நிலை செயல்பாட்டிற்கும் உள்ளாக்க வேண்டிய நிலையில் உள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Diet, Healthy Food, Nutrition food