• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கர்ப்பிணி பசுவின் வயிற்றில் நகங்கள், பிளாஸ்டிக் உட்பட 71 கிலோ கழிவுகள் - சிகிச்சை அளித்தும் உயிரிழந்த பரிதாபம்!

கர்ப்பிணி பசுவின் வயிற்றில் நகங்கள், பிளாஸ்டிக் உட்பட 71 கிலோ கழிவுகள் - சிகிச்சை அளித்தும் உயிரிழந்த பரிதாபம்!

பசுக்கள்

பசுக்கள்

கடந்த பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய பசு ஒன்று ஃபரிதாபாத்தில் உள்ள பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் டிரஸ்ட் (People For Animals Trust) உறுப்பினர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கர்ப்பிணி பசு கொஞ்சம் சிரமப்படுவதை கால்நடை மருத்துவர் விரைவில் கவனித்தார்.

  • Share this:
ஃபரிதாபாத்தில் ஒரு கர்ப்பிணி பசுவின் வயிற்றில் இருந்து 71 கிலோகிராம் அதாவது சுமார் 156.5 பவுண்டுகள் எடையுள்ள பிளாஸ்டிக், நகங்கள் மற்றும் பிற குப்பைகளை கால்நடை மருத்துவர்கள் பிரித்தெடுத்துள்ளனர். ஆனால் அந்த பசு மற்றும் அதன் கன்று ஆகிய இரண்டும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விவகாரம் நாட்டின் மாசு மற்றும் தவறான கால்நடை வளர்ப்பு என இரட்டை பிரச்சினைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்திய நகரங்களில் மட்டும் சுமார் ஐந்து மில்லியன் பசுக்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் பல பசுக்கள் தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உண்டு வருகின்றன. இதனால் பல விலங்குகள் உடல் நலக்குறைபாடுகளால் உயிரிழக்கின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய பசு ஒன்று ஃபரிதாபாத்தில் உள்ள பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் டிரஸ்ட் (People For Animals Trust) உறுப்பினர்களால் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கர்ப்பிணி பசு கொஞ்சம் சிரமப்படுவதை கால்நடை மருத்துவர் விரைவில் கவனித்தார்.

இதையடுத்து, பிப்ரவரி 21-ம் தேதி நான்கு மணி நேர அறுவை சிகிச்சை பசுவிற்கு நடத்தப்பட்டது. அப்போது, கால்நடையின் வயிற்றில் இருந்து நகங்கள், பிளாஸ்டிக், பளிங்கு மற்றும் பிற குப்பைகளை கண்டுபிடித்ததாக அறக்கட்டளைத் தலைவர் ரவி துபே தெரிவித்தார். மேலும் கர்ப்பிணி பசுவின் ப்ரீமெச்சூர் டெலிவரிக்கும் மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய அறக்கட்டளை தலைவர், "கன்றுக்கு தனது தாயின் வயிற்றில் வளர போதுமான இடம் இல்லை, அதனால் அது இறந்துவிட்டது. இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு, பசுவும் இறந்தது. எனது 13 வருட அனுபவத்தில், ஒரு பசுவிலிருந்து நாங்கள் எடுத்த மிக அதிகமான குப்பை இதுதான். பசுவின் வயிற்றில் இருந்து குப்பைகள் அனைத்தையும் வெளியேற்ற எங்களது அதிக சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஹரியானாவை சேர்ந்த ஒரு ட்ரஸ்ட் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில் மாடுகளின் வயிற்றில் 50 கிலோ வரை கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ``மாடு எங்களுக்கு மிகவும் புனிதமானது. ஆனால் யாரும் அதன் வாழ்க்கை முறையை ஒழுங்காக கவனிப்பதில்லை. ஒவ்வொரு நகரத்தின் ஒவ்வொரு மூலையிலும் மாடுகள் கழிவுகளை சாப்பிடுகிறது, ” என்று துபே மேலும் கூறினார்.

இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பசு கன்று ஈன்ற பிறகு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. சாணம், சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வலியால் துடித்துள்ளது. இதையடுத்து மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க முடிவு செய்தனர். சுமார் 5 மணிநேரமாக நடந்த அறுவை சிகிச்சையில் மாட்டின் இரைப்பையில் சிக்கி இருந்த 52 கிலோ எடை பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினார்கள். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மாட்டின் வயிற்றில் 2 ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: