புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்பும், வலிகளும் மன்னிக்கமுடியாத கொடூரம் - அசீம் ப்ரேம்ஜி

அசீம் ப்ரேம்ஜி அறக்கட்டளை, விப்ரோ மற்றும் விப்ரோ குழுமம் அனைத்தின் சார்பாகவும், கொரோனா நிவாரண, தடுப்பு பணிகளுக்காக 1,125 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்பும், வலிகளும் மன்னிக்கமுடியாத கொடூரம் - அசீம் ப்ரேம்ஜி
azim premji
  • Share this:
புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகளும், வலிகளும் மன்னிக்கமுடியாத கொடூரம் எனவும், தொழிலாளர் சட்டங்களில் மாநில அரசுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் தொழிலாளர் பாதுகாப்புக்கு எதிரானது என்றும் விப்ரோ நிறுவனர் அசீம் ப்ரேம்ஜி எகனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் நிவாரணத் தொகுப்பு குறித்து பேசிய அவர், “ஊரக வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவது மிக முக்கியமான நகர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, பொது விநியோகம் மூலமாக, 3.6 மாதங்களுக்கு எண்ணெய், தானியம், உப்பு, மசாலா, சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ஒவ்வொரு ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளியின் வீட்டுக்கும், மூன்று மாதங்களுக்கு 7000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அசீம் ப்ரேம்ஜி அறக்கட்டளை, விப்ரோ மற்றும் விப்ரோ குழுமம் அனைத்தின் சார்பாகவும், கொரோனா நிவாரண, தடுப்பு பணிகளுக்காக 1,125 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: May 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading