ஊரடங்கால் இலங்கையில் தவித்த இந்தியர்கள் ’ஜலஸ்வா' கப்பலில் நாடு திரும்பினர்

கொரோனா ஊரடங்கால் இலங்கையில் சிக்கித் தவித்த தமிழர்கள் உள்பட 700 பேர் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு திரும்பினர்.

ஊரடங்கால் இலங்கையில் தவித்த இந்தியர்கள் ’ஜலஸ்வா' கப்பலில் நாடு திரும்பினர்
கப்பல்
  • Share this:
ஊரடங்கு காரணமாக இலங்கை, மாலத்தீவு, ஈரான் நாடுகளில் சிக்கித் தவிக்கும் 2100 இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இலங்கையில் கொழும்புவில் சிக்கித் தவித்த தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 700 பேரை அழைத்துக் கொண்டு இந்திய கடற்படை கப்பல் "ஜலஸ்வா" தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை இன்று காலை 10 மணிக்கு வந்தடைந்தது.

துறைமுகத்தில் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அவர்களது கையில் சீல் வைக்கப்பட்டது. இதன்பின் பயணிகளை 25 பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த ஊர் அனுப்பப்பட்டு அரசு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


மேலும் படிக்க...

தென்மேற்கு பருவமழை - மகிழ்ச்சியான செய்தி சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம் 

 
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading