கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பின் கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி!

கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார்.

  • Share this:
கொரோனா பரவலை எதிர்த்து போராட உலக நாடுகளுக்கு தற்போது முக்கிய கேடயமாக இருந்து வருகின்றன கோவிட் தடுப்பூசிகள். கொரோனா தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துக்கள் மற்றும் தகவல்கள் மக்களிடையே பரவி இருக்கின்றன. எனினும் தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுத்திய பேரழிவை கண்ணால் கண்ட பிறகு நாட்டின் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஒரு சில பொதுவான பக்கவிளைவுகளை தடுப்பூசிகள் வெளிக்காட்டினாலும் 2 முதல் 4 நாட்களுக்குள் அவை சரியாகி விடுகின்றன.

இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொண்ட பிறகு, இழந்த கண் பார்வையை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்வதற்கான தயக்கம் மக்களிடையே ஒரு பக்கம் தொடர்ந்தாலும், மறுபக்கம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்று கொள்ள ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு வினோதமான சில உடல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறித்த சில செய்திகளை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த அர்விந்த் சோனார் என்ற 67 வயதான முதியவர் கூறி இருந்தார்.முதல் டோஸ் போட்டு கொண்ட போது எந்த சிலைக்கும் இல்லாத தனக்கு, இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு தனது உடலில் காந்த சக்தி மிக அதிகமாக காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Bol Bhidu (@bolbhidu)


 

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதையடுத்து மாநகராட்சியில் இருந்து வந்து விசாரணை செய்துள்ளனர். நாசிக் மாநகராட்சியை சேர்ந்த மருத்துவர் அரவிந்த் சோனார் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய மருத்துவர் அசோக், “ நான் அந்த வீடியோவை பார்த்தேன். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இவ்வாறு நடந்தது என உறுதி செய்யமுடியாது.

விசாரணைக்கு பின்னரே இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியும். இந்த விவகாரத்தில் இப்போதைக்கு அரசாங்கத்துக்கு ஒரு அறிக்கை அனுப்புவோம். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்” என்றார்.

 

  

இதுதொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் (PIB Fact check) ட்விட்டர் போஸ்டில். கோவிட் 19 தடுப்பூசியால் மக்களுக்கு காந்த சக்தி எல்லாம் ஏற்படாது. தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ |  கோவையில் போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள்: வைரல் வீடியோவால் பரபரப்பு!

இதனிடையே தற்போது தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு இழந்த கண்பார்வை சிறிது கிடைத்துள்ளதாக கூறும்  மூதாட்டி, மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான மதுராபாய் பிட்வே ஆவார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். மதுராபாய் ஜல்னா மாவட்டத்தில் பார்த்தூரை பூர்வீகமாகக் கொண்டவர். கண்பார்வை இல்லாத காரணத்தால் ரிசோட் தெஹ்ஸில் பகுதியில் அவர் தன் உறவினர்களுடன் வசித்து வருகிறார்.

கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி


இந்நிலையில் கடந்த ஜூன் 26 அன்று கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை பெற்று உள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட அடுத்த நாளே, ஒரு கண்ணில் தனது பார்வையில் 30 முதல் 40 சதவிகிதம் திரும்ப பெற்றதாக கூறி உள்ளதாக ஜீ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ALSO READ |  ’இப்போ யார் புருஷன்னு கேக்குறாங்க’ வனிதா விஜயகுமார் வருத்தம்

ஆனால் கோவிஷீல்ட் முதல் டோஸ் அல்லது வேறு ஏதேனும் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு மீண்டும் கண்பார்வை பெறுவது குறித்த அவரது கூற்றுகளுக்கு விஞ்ஞான ரீதியான எந்த ஒரு ஆதாரமோ, விளக்கமோ இல்லை.

கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி


ஏற்கனவே தடுப்பூசி போட்டு கொண்டதால் காந்தசக்தி உடலில் அதிகரித்துள்ளது என சிலர் கூறி வரும் நிலையில், தற்போது இழந்த கண்பார்வை மீண்டும் படிப்படியாக கிடைத்து வருவதாக மூதாட்டி கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: