ஏமாந்த கேரள சிறுவனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த ராகுல்!

தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுல் காந்தியைப் பார்க்க முடியாமல் போனது.

Web Desk | news18
Updated: April 19, 2019, 1:26 PM IST
ஏமாந்த கேரள சிறுவனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த ராகுல்!
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: April 19, 2019, 1:26 PM IST
கேரள சிறுவன் ஒருவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது பிரசார பயணத்தின் போது பார்த்துவிட முயற்சித்து ஏமாந்த சிறுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ராகுல்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை வயநாடு மற்றும் அமேதி என இரு மக்களவைத் தொகுதிகளிலிருந்து போட்டியிடுகிறார். இதற்காகக் கடந்த 17-ம் கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ராகுல். அப்பகுதியில் வசிக்கும் நந்தன் என்னும் ஏழு வயது சிறுவன் ராகுல் காந்தியைப் பார்க்க விரும்பியுள்ளான்.

ராகுலின் ரசிகனாகக் கூறப்படும் அந்தச் சிறுவன் காலை 5 மணி முதலே ராகுலைப் பார்த்துவிட காத்திருந்துள்ளான். தனது பெற்றோருடன் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்த சிறுவனால் கடைசியில் ராகுல் காந்தியைப் பார்க்க முடியாமல் போனது. ’எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகை உடன் காத்திருந்த சிறுவனுக்கு ஏமாற்றமாகியுள்ளது.

ராகுலைப் பார்க்கமுடியாமல் அழுதுகொண்டிருந்த சிறுவனின் புகைப்படத்தை அச்சிறுவனின் தந்தை ஃபேஸ்புக்கில் பதிவிட, அந்தப் பதிவு கேரளாவில் வைரலாகி உள்ளது. இது கேரள காங்கிரஸார் மூலம் ராகுலுக்கு தகவல் செல்ல உடனடியாக சிறுவன் நந்தனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் ராகுல்.

இதனால், மகிழ்ந்த சிறுவன் ராகுலுக்கு நன்றி தெரிவித்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.

மேலும் பார்க்க: பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி சரக்கு ரயிலை திடீரென நிறுத்திய ஓட்டுநர்! போக்குவரத்து பாதிப்பு
Loading...
First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...