Home /News /national /

ம.பி.யில் பயங்கரம்: 7 வயது சிறுவனை உயிருடன் விழுங்கிய ராட்சத முதலை - கிராமத்தினர் கடும் கோபம்

ம.பி.யில் பயங்கரம்: 7 வயது சிறுவனை உயிருடன் விழுங்கிய ராட்சத முதலை - கிராமத்தினர் கடும் கோபம்

7வயது சிறுவனை விழுங்கிய முதலை இதுதான்

7வயது சிறுவனை விழுங்கிய முதலை இதுதான்

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தில் சம்பல் ஆற்றில் குளிக்கச் சென்ற 7வது சிறுவன் அந்தர் சிங்கை ராட்சத முதலை விழுங்கியதாக கிராமத்தினர் முதலையை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டு அதன் வயிற்றைக் கிழித்து பையனை உயிருடன் மீட்க வேண்டும் என்று போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியூள்ளது.

முதலை சிறுவனை விழுங்காது என்று போலீசார் தரப்பில் கூற கோபமடைந்த நூற்றுக்கணக்கான கிராமத்தினர் முதலை விழுங்கியதாகக் கருதப்படும் அந்தர் சிங்கின் பெற்றோரும் முதலையை கிழித்து பையனை மீட்க வேண்டும் என்றும் பையன் உயிருடன் இருப்பான் என்று நம்பி முதலையைக் கரையில் இழுத்துப் போட்டு அதன் வாயில் பெரிய பிரம்பு கம்பு ஒன்றை சொருகியுள்ளனர், அதனால் பையனை முதலை கடித்துத் தின்னாமல் இருக்கும் என்கின்றனர் கிராமத்தினர் மேலும் அவர்கள் அந்தர் சிங்கின் பெயரைச் சொல்லி அழைத்தனர், அவன் உயிருடன் இருப்பதாக நம்பினர்.

இதற்கிடையில் சம்பல் நதியின் ஆழமான பகுதிக்கு 7வயது சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று எஸ்.டி.ஆர்.எப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர், ஆனால் கிராமத்தினரோ முதலையை கிழிக்கும் வரை அதை விட மாட்டோம் என்று சிறைப்பிடித்து வைத்தனர். நதியில் தேடச்சென்ற குழுவும் இன்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடலையும் நிறுத்தி விட்டனர்.

பையனை முதலை விழுங்காது என்று எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரிகளும் வலியுறுத்தி முதலையை தங்களிடம் விடுமாறு வலியுறுத்தினர், ஆனால் கிராமத்தினர் முதலைகள் மனிதனை உண்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பல் ஆற்றில் நிறைய முதலைகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர்.

சில கிராமத்தினர் பையனை முதலை விழுங்கியதை நேரில் கண்டதாகவும் கூறுகின்றனர். இவர்கள்தான் சிறுவனின் குடும்பத்தினரை அழைத்ததாகவும் தெரிகிறது. அதன் பிறகுதான் பெரிய வலை, கம்பு, தடிகள் சகிதம் முதலையை தண்ணீரிலிருந்து பிடித்து கரையில் கொண்டு போட்டுள்ளனர்.

கடைசியில் ஒருவழியாக முதலையைக் கிழிக்காமல் கிராமத்தினரிடமிருந்து முதலையை மீட்டனர், ஆனால் பையன் கதி என்னவென்று தெரியவில்லை, பையன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, முதலை விழுங்கி விட்டது என்றே கிராமத்தினர் கடும் கோபத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Published by:Muthukumar
First published:

Tags: Crocodile, Madhya pradesh

அடுத்த செய்தி