Home /News /national /

நீர் மேலாண்மை.. விண்வெளி.. ரயில்வே பயிற்சி.. இந்தியா - வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

நீர் மேலாண்மை.. விண்வெளி.. ரயில்வே பயிற்சி.. இந்தியா - வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

India - Bangladesh Relations: இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் வகையில் இந்த 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • new, India
    இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பிரதமர் மோடியைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஷேக் ஹசினா ஏற்றார். பின்பு, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஷேக் ஹசினா மரியாதை செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து, ஷேக் ஹசினா ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குஷியாரா ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்ள இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், வங்கதேசத்தின் நீர் மேலாண்மை அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    வங்கதேச ரயில்வே பணியாளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும், வங்கதேச நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் விண்வெளி மற்றும் ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றவும் பருவநிலை மாற்றம் மற்றும் சுந்தரவனக் காடுகள் போன்ற பாரம்பரிய இடங்களைக் காக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    Also Read : "ரஷ்யா உலகம்" புதிய வெளியுறவுக் கொள்கைக்கு புதின் ஒப்புதல் - இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முடிவு!

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஷேக் ஹசினாவின் ஆட்சியில் வங்கதேசம் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். வங்கதேசத்திற்கு இந்தியா மிகப்பெரிய நட்பு நாடு என ஷேக் ஹசீனா தெரிவித்தார். பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை ஷேக் ஹசீனா சந்தித்துப் பேசினார். இதனிடைய மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள துர்கா பூஜைக்காக, முதல்கட்டமாக 8.5 மெட்ரிக் டன் ஹில்சா மீன் கொல்கத்தா வந்தடைந்தது.

    2012- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஹில்சா மீன் ஏற்றுமதிக்கு வங்கதேசம் தடை விதித்திருந்தது. 2019-ல் அந்த தடை நீக்கப்பட்டது. இந்த ஆண்டு துர்கா பூஜை திருவிழாவையொட்டி 2,450 மெட்ரிக் டன் ஹில்சா மீனை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.

    இந்தியா வருகையைப் பற்றி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பேசுகையில், வறுமையை ஒழிப்பதில் இருநாடுகளும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் தற்போது இந்த சந்திப்பு நன்மையாக அமைத்தது என்றும் இந்தியாவின் விருந்தோம்பலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்தியா 75வது சுதந்திர தினத்தை வெற்றிகரமாகக் கொண்டாடியதைப் பாராட்டியுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Bangladesh, India, Prime Minister Narendra Modi

    அடுத்த செய்தி