தெலங்கானாவில் ஆட்டோ, லாரி மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் படுகாயம்

விபத்துக்கு உள்ளான ஆட்டோ

ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்திற்கான முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

 • Share this:
  தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் அங்காடிபேட்டை அருகே ஆட்டோ , லாரி ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  தெலங்கான மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள அங்காடிபேட்டை அருகே கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, லாரி ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த கூலி தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  நலகொண்டா மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரியுடன் மோதிய ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது.

  மேலும் படிக்க... சசிகலாவுக்கு கொரோனா தொற்று

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. தொடந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த கோர விபத்தால், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: