ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருமண விழாவுக்கு ட்ராக்டரில் பயணம்.. விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

திருமண விழாவுக்கு ட்ராக்டரில் பயணம்.. விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு!

திருப்பதி - சாலை விபத்து

திருப்பதி - சாலை விபத்து

Tirupati | திருப்பதி அருகே திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati NMA, India

திருப்பதி அருகே உள்ள பூத்தல பட்டு அருகே திருமண கோஷ்டி சென்று கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள செட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் திருமண விழாவில் பங்கேற்க டிராக்டரில் சென்றுள்ளனர். பூத்தனப்பட்டு அருகே வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்தவர்கள் அடியில் சிக்கி கொண்டனர்.

இதனால் அவர்களில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த பூத்தலப்படு போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் அடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டிராக்டர் கவிழ்ந்ததை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்த இந்த விபத்தை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பார்த்து உள்ளூர் மக்களுக்கு தகவல் அளித்தனர்.

Also see... நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு..

எனவே உள்ளூர் மக்களும் அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு பலரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

First published:

Tags: Road accident, Tirupati