இந்தியாவில் 10-ல் 7 நகரவாசிகள் போன் கேமில் மூழ்கிக் கிடக்கின்றனராம்

இந்தியாவில் நகர்புறங்களில் வாழும் 10-ல் 7 பேர் மொபைல் விளையாட்டில் மூழ்கியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10-ல் 7 நகரவாசிகள் போன் கேமில் மூழ்கிக் கிடக்கின்றனராம்
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 31, 2020, 4:11 PM IST
  • Share this:
ஸ்மார்ட்போனில் கேம் விளையாடுவோர் எண்ணிக்கையில் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வாழும்  இந்தியர்களில் 10ல் 7 பேர், மொபைல் கேம்களில் மூழ்கியிருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.

இன்றைய காலகட்டத்தில், மொபைல் கேமர்கள் தான் (ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் விளையாடுவது) PC அல்லது கன்சோல் விளையாட்டாளர்களை விட அதிகமானோர்களாக உள்ளனர். ஏனெனில், ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டைப் பயன்படுத்தும் நபர்களோடும் ஒப்பிடும்போது வெறும் 12 சதவீத பேரே கன்சோல்களில் விளையாடுகிறார்கள். இந்தியாவில், கேமிங் மக்கள்தொகையில் 82 சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரம் வரை ஸ்மார்ட்போன்களில் விளையாடுகிறார்கள். 

மேலும் 16 சதவீதம் பேர் மட்டுமே தீவிரமாக விளையாடுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். (அதாவது வாரத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விளையாடுகிறார்கள்). கணக்கெடுக்கப்பட்ட 24 நாடுகளில், உலகின் முதல் 10 கேமிங் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 


இந்தியாவில் விளையாட்டாளர்களின் சதவீதம், அமெரிக்காவின் 71 சதவீதம் மற்றும் ஆஸ்திரேலியாவின் 72 சதவீதம் ஆகியவற்றுடன் இணையாக உள்ளது. இருப்பினும், இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விகிதாச்சாரத்தை விட இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், கன்சோல் விளையாட்டாளர்களின் முன்னணி சந்தைகள் ஹாங்காங்கில் 32 சதவீதம், ஸ்பெயினில் 29 சதவீதம், அமெரிக்காவில் 28 சதவீதம், இங்கிலாந்தில் 28 சதவீதம் மற்றும் ஆஸ்திரேலியாவில் 27 சதவீதம் ஆகும்.

Also read... இந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்கேம்கள் விளையாடுவது போதாதென்று, முக்கியமான துணைப் பிரிவாக கேமர்களுக்கு ஆன்லைனில் வீடியோ கேம்களைப் பார்ப்பது கேமிங்கைப் போலவே ஒரு பொழுது போக்குகளாக மாறிவிட்டது. மேலும் "விழிப்புணர்வின் அடிப்படையில் இந்தியா உலகளவில் ஐந்தாவது இடத்திலும், யூடியூப் கேமிங்கில் ஈடுபடுவதில் மூன்றாவது இடத்திலும் உள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.யூடியூப் கேமிங்குடன் ஒப்பிடும்போது, ​​ஒரு சிறிய சதவீதமாக ட்விட்டர் அல்லது பேஸ்புக் கேமிங்கில் 12 சதவீதம் ஈடுபட்டுள்ளது. எஸ்போர்ட்ஸைப் பொறுத்தவரை, இந்தியாவில் 31 சதவீதமாக குறைந்துள்ளது. குறைவாக இருந்தபோதிலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் போன்ற மிகவும் விழிப்புணர்வுள்ள சந்தைகளை விட இந்தியாவில் ஸ்போர்ட்ஸுடன் ஈடுபடுவது மிக அதிகம். "இந்த போட்டிகளை இந்தியர்கள் தழுவிக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக இது அறிவுறுத்துகிறது. மேலும் நாட்டில் ஸ்போர்ட்ஸுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதையும் இது குறிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading