முகப்பு /செய்தி /இந்தியா / ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 7 வீரர்கள் மரணம்..

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 7 வீரர்கள் மரணம்..

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து..  7 வீரர்கள் மரணம்..

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 7 வீரர்கள் மரணம்..

Ladakh army accident - 19 வீரர்களை உயர் சிகிச்சைக்காக விமானப்படை உதவியுடன் சண்டிகருக்கு சி-17 க்ளோப்மாஸ்டர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

லாடக்கில், இந்திய ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த வாகனம் லாடக்கின் கோர்கே பகுதி அருகே சென்றுகொண்டிருந்த போது ஷய்யோக் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் மொத்தம் 26 வீரர்கள் சென்றுள்ளனர் எனவும் இந்த விபத்து காலை 9 மணி அளவில் நடைபெற்றதாகவும் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து 50-60 அடி ஆழத்தில் விழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவயிடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர். உடனடியாக அனைத்து வீரர்களும் மீட்கப்பட்டு, பர்தாபூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக இதுவரை ஏழு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சிகிச்சை பெறும் வீரர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி தர ராணுவம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ராணுவத் தரப்பு கூறியது.

இந்நிலையில், சிகிச்சையில் உள்ள 19 வீரர்களையும் உயர் சிகிச்சைக்காக விமானப்படை உதவியுடன் சண்டிகருக்கு சி-17 க்ளோப்மாஸ்டர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாயுடன் நடைபயிற்சி செய்ய மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் தம்பதி அதிரடி டிரான்ஸ்பர் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

இந்த விபத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Accident, Army man, Ladakh