Home /News /national /

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் புதிய விதிமுறையை ஏற்படுத்திய மத்திய அரசு

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் புதிய விதிமுறையை ஏற்படுத்திய மத்திய அரசு

கொரோனா பாசிடிவாக வந்தால் அவர்களின் மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்பில் இருந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்கள் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

    கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின் அடிப்படையில் ஜனவரி 31-ம்தேதி வரை, சர்வதேச விமான சேவை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும்? ஆய்வு தகவல்கள் வெளியீடு

    இருப்பினும், சார்ட்டட் ஃப்ளைட் எனப்படும், வாடகை விமானங்கள் மூலம் அத்தியாவசிய தேவைக்காக பயணிகள் சென்று வருகின்றனர். அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் வீடுகளில் தங்களை குறைந்தது 7 நாட்களாகவது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் தங்களது அனைத்து விபரங்களையும், கடந்த 14 நாட்களில் சென்று வந்த நாடுகளினி விபரங்களையும், சுவிதா இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதேபோன்று 72 மணி நேரத்திற்குள்ளாக ஆர்.டி. பி.சிஆர். பரிசோதனை மேற்கொண்டு அதில், கொரோனா நெகடிவ் என்ற தகவலையும் சம்பந்தப்பட்ட பயணிகள் உறுதி செய்ய வேண்டும். இதை செய்ய தவறினால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

    இதையும் படிங்க : 11 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்- பீகாரில் அதிர்ச்சி- விசாரணைக்கு உத்தரவு

    பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போத்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், தான்சானியா, கானா, காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் அதிக பாதிப்பு கொண்டவையாக தீர்மானிக்கப்பட்டுள்ளன.

    இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்தியா வந்ததும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றுகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் நெகடிவாக வந்தால் அவர்கள், தங்களை 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கொரோனா பாசிடிவாக வந்தால் அவர்களின் மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்பில் இருந்தவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்தியாவில் கடந்த 214 நாட்களுக்கு பின்னர் ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

    இதையும் படிங்க : இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி