கும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி!

கும்பமேளா

கும்பமேளாவில் இருந்து திரும்பிய 67 வயது பெண்மணியின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவருடைய மருமகளும் மனநல மருத்துவரான டாக்டர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்மணி ஒருவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியிருப்பது தெரியவந்திருப்பதால் பெங்களூரு மாநகராட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் சொல்லனாத்துயரங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டும், குடும்ப உறுப்பினர்களை இழந்தும் பலர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு சரிவை சந்திக்கத் தொடங்கியது. இதனையடுத்து கொரோனாவுக்கான தடுப்பூசியும் கண்டுபிடுக்கப்பட்டதால் துவண்டு போயிருந்த மக்களுக்கு புத்துணர்வு பிறந்தது.

இதனிடையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவலில் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான கும்பமேளா கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா உச்சத்திற்கு இடையே நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர், இது கொரோனா பரவலுக்கு வழி வகுத்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது பெண் ஒருவர் கும்பமேளாவில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை அப்பெண்மணியிடமிருந்து பரவியதன் மூலம் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

67 வயது பெண்மணியின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவருடைய மருமகளும் மனநல மருத்துவரான டாக்டர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:   நாடு முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு

இதனையடுத்து அப்பெண்ணின் மருமகள் வேலை பார்த்து வந்த ஸ்பந்தனா மனநல மருத்துவமனையில் அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 13 பேருக்கும், மருத்துவமனை ஊழியர்கள் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய பெண்மணியிடமிருந்து குடும்பத்தினர், மருத்துவமனை நோயாளிகள், ஊழியர்கள் என மொத்தமாக 33 பேருக்கு கொரோனா பரவியுள்ளது பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் படிக்க:   இந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் உங்களால் ரூ.45,000 சம்பாதிக்க முடியும்!

ஸ்பந்தனா மனநல மருத்துவமனை தலைவரும் மருத்துவருமான ஆர்.கவுடா கூறுகையில், மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள் என 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்கள் மருத்துவமனையில் முதல் தளம் தற்காலிகமாக மூடப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், ஊழியர்களுக்கு அங்கேயே தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு மேலும் பிறருக்கு கொரோனா பரவாமல் தடுக்கப்படும் என கூறினார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பேர் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Published by:Arun
First published: