முகப்பு /செய்தி /இந்தியா / உடலுறவின்போது உயிரிழந்த 67 வயது தொழிலதிபர்... கணவரின் உதவியுடன் உடலை சாலையில் வீசிய பெண்!

உடலுறவின்போது உயிரிழந்த 67 வயது தொழிலதிபர்... கணவரின் உதவியுடன் உடலை சாலையில் வீசிய பெண்!

உடலுறவின் போது மரணம்

உடலுறவின் போது மரணம்

கர்நாடக மாநிலம் ரோஸ் கார்டன் பகுதியில் தொழிலதிபரின் மர்ம மரணத்தின் பின்னணியில் 35 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவின் ரோஸ் கார்டன் பகுதி ஜேபி நகரில் நவம்பர் 17ஆம் தேதி அன்று 67 வயது தொழிலதிபர் பிளாஸ்டிக் பை ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த நபரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து புத்தேனஹள்ளி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் காவல்துறை உயிரிழந்த நபரின் செல்போன் பதிவுகளை கொண்டு நடத்திய விசாரணையில் உண்மைகள் அம்பலமாகியுள்ளது. சம்பவ தினமான நவம்பர் 16ஆம் தேதி மாலை அந்த தொழிலதிபர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இரவு வீடு திரும்புவதாக கூறிச் சென்ற நபர் சொன்னபடி திரும்பவில்லை. குடும்பத்தார் போன் செய்து பார்த்தபோது அது ஸ்விட்ச் ஆப் இல் இருந்துள்ளது. இந்நிலையில்,அடுத்த நாள் காலைதான் இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனவே, மாலைக்கு மேல் அந்த நபரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதில் இருந்து சரக்கி என்ற பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணை பிடித்து காவல்துறை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

35 வயதான அந்த பெண்ணுக்கும் 67 வயது நபருக்கும் சமீப காலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது; அது நெருக்கமாக மாறியுள்ளது. அன்றைய தினம் மாலை இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  அப்போது அந்த 67 வயது நபருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய இரும்பு சாவி கொடுத்தபோதும் சரியாகாமல் அவர் உயிரிழந்துவிட்டார். தங்கள் உறவு வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி, அந்த பெண் கணவர் மற்றும் சகோதரனை அழைத்து அவர்களின் உதவியுடன் உடலை பிளாஸ்டிக் பையில் மூடி ரோஸ் கார்டன் பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமண வரவேற்பில் 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து திடீர் மரணம் : நடனமாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

top videos

    பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பெண், அவரது கணவர், சகோதரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. அதேவேளை, உயிரிழந்த நபரின் உடலின் பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் போலீசார் காத்துள்ளனர். அதன்பின்னரே பெண்ணின் வாக்குமூலம் முழுவதும் உண்மைதானா என்பது தெரியவரும்.

    First published:

    Tags: Bengaluru, Death, Sex