Home /News /national /

உல்லாச கப்பலில் 66 பேருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் பிற பயணிகள் போராட்டம்

உல்லாச கப்பலில் 66 பேருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் பிற பயணிகள் போராட்டம்

Cruise ship

Cruise ship

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் கப்பலில் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் தங்களுக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் பிற பயணிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    கோவாவுக்கு 2,000 பேருடன் புத்தாண்டு கொண்டாட சென்ற உல்லாசக் கப்பலில்  66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் ஹாயாக வெளியே சுற்றித்திருவதால் தாங்களும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தில் பிற பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    இந்தியாவின் உல்லாச சொகுசு கப்பலான Cordeliaவை நினைவிருக்கிறதா? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இக்கப்பலில் நடைபெற்ற நட்சத்திர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

    அதே Cordelia சொகுசுக் கப்பல் தற்போது மீண்டும் ஊடக வெளிச்சத்தில் சிக்கியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு மும்பையில் இருந்து 2,000 சுற்றுலா பயணிகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கோவா புறப்பட்டது இந்த கப்பல். அப்போது சிப்பந்திகளுள் ஒருவருக்கு கொரோனா இருப்பது கடந்த ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 66 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது என கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

    Also read:  டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவரை எட்டி உதைத்த போலீஸ்காரர் - வைரல் வீடியோ

    மேலும் கொரோனா நோயாளிகளை கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இவர்களில் 6 பேரை தவிர வேறு யாரும் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டு தொடர்ந்து கப்பலிலேயே இருந்தனர். இந்த கப்பலானது Mormugao துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, அந்த கப்பலில் இருக்கும் பிற பயணிகள் கப்பலில் இருந்து இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இறங்க அனுமதிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் கப்பலில் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் தங்களுக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் பிற பயணிகளுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Also read:  10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

    இதனிடையே கோவாவில் இருந்து மீண்டும் மும்பைக்கே இந்த கப்பல் இன்று புறப்பட்டு சென்றிருக்கிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் கடந்த 2020 தொடக்கத்தில் ஜப்பானின் டயமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்த 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி