மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு

மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு

நடப்பு ஆண்டின் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆசிரியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட வொயிட் காலர் பணியிடங்களில் 66 லட்சம் பேர் வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் வொயிட் காலர் பணி என்றழைக்கப்படும் அலுவலகப் பணியாளர்களான மென்பொறியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள் என 66 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டின் மே முதல் ஆகஸ்ட் வரையில் 1.88 கோடி பேர் வொயிட் காலர் பணியாளர்களாக இருந்து வந்த நிலையில், நடப்பாண்டில் அது 1.22 கோடியாகக் குறைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பாண்டில் அதிகம் பேர் வேலையிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  Also read: பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக டி.ஆர்.பாலு கோரிக்கை

  அதைத்தொடர்ந்து தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அதில் குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அதிகளவில் வேலையை இழந்துள்ளனர்.
  Published by:Rizwan
  First published: