முகப்பு /செய்தி /இந்தியா / சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிய பரோட்டா... பெண் பரிதாப பலி... அதிர்ச்சி சம்பவம்..!

சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிய பரோட்டா... பெண் பரிதாப பலி... அதிர்ச்சி சம்பவம்..!

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் மரணம்

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் மரணம்

சாப்பிடும்போது பரோட்டா தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தம்பி. இவரது மனைவி 68 வயதான ஜானகி. இவர் தனது வீட்டில் நேற்று காலை சாப்பாட்டிற்கு பரோட்டாவும் முட்டை கறியும் சமைத்துள்ளார். பின்னர், ஜானகி தனது கணவருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டுள்ளனர்.

ஜானகி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவரது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டது. அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஜானகி தவித்துள்ளார். இதனால் அவரல் முறையாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பதறிப்போன கணவரும் உறவினர்களும் ஜானகியை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: அந்தரங்க படங்களை காட்டி ப்ளாக் மெயில்... 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை... வெளிநாட்டு பெண்ணுக்கு மும்பையில் நேர்ந்த கொடூரம்..!

அங்கு ஜானகியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஜானகியின் தொண்டையில் பரோட்டா சிக்கி அடைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். இந்த எதிர்பாராத மரணம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Death, Kerala, Parotta