முகப்பு /செய்தி /இந்தியா / எனக்கு 65..உனக்கு 23.. 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த அதிசய திருமணம்..!

எனக்கு 65..உனக்கு 23.. 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த அதிசய திருமணம்..!

23 வயது பெண்ணை திருமணம் செய்த 65 வயது நபர்

23 வயது பெண்ணை திருமணம் செய்த 65 வயது நபர்

6 பெண்களுக்கு தந்தையான 65 வயது நபர் ஒருவர் மனைவியின் மறைவைத் தொடர்ந்து 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

30 வயதை தாண்டினாலே திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கும் 90ஸ் கிட்ஸ் வாழும் இந்த காலத்தில் 6 பெண்களுக்கு தந்தையான 65 வயது நபருக்கு மறுமணம் ஆகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாராபங்கி மாவட்டத்தின் ஹூசைனாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான நக்கத் யாதவ். இவருக்கு திருமணமாக 6 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தனது 6 பெண்களுக்கும் திருமணம் செய்து தனது கடமைகளை முடித்து விட்டார் நக்கத் யாதவ். இந்நிலையில், நக்கத் யாதவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். மனைவியின் பிரிவினால் ஏற்பட்ட தனிமையை நக்கத் யாதவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, தனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று முடிவெடுத்த நக்கத் யாதவ், தன்னை விட 42 வயது குறைவான 23 வயதான நந்தினி பெண்ணை தற்போது திருமணம் செய்துள்ளார்.

இதற்கு நக்கத் யாதவ்வின் 6 மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோயிலில் 23 வயது இளம் பெண் நந்தினிக்கு 65 வயதான நக்கத் யாதவ் தாலி கட்டி மணம் முடித்தார். இந்த திருமணம் உறவினர் புடை சூழ அனைத்து சடங்குகளுடன் கொண்டாடட்டத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு டிஜே மியூசிக் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்கள் நடனமாடினர். இந்த திருமண நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: அசல் விமானம் மாதிரியே கட்டப்பட்ட வீடு.. விமானத்தில் பறக்கும் ஆசையால் தோன்றிய சூப்பர் ஐடியா!

தனது திருமணம் குறித்து பேசிய நக்கத் யாதவ், எனது 6 மகள்களும் தங்கள் கணவர்கள் குழந்தைகளும் சந்தோஷமாக அவர்கள் வீட்டில் வாழ்கின்றனர்.அவர்கள் சம்மதத்தை பெற்று தான் இந்த திருணத்தை செய்து கொள்கிறேன். மனைவியின் மறைவு என்னை தனிமையில் தள்ளியதால் அதில் இருந்து மீள மறு திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். மணப்பெண் நந்தினியும் இந்த திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சி எனவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Marriage, Uttar pradesh, Viral News