ஹோம் /நியூஸ் /இந்தியா /

மொபைல் போனுக்கு வந்த நிர்வாண வீடியோ கால்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை மிரட்டி ரூ.17.8 லட்சம் பறித்த மர்மப் பெண்!

மொபைல் போனுக்கு வந்த நிர்வாண வீடியோ கால்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியை மிரட்டி ரூ.17.8 லட்சம் பறித்த மர்மப் பெண்!

கோப்பு படம்

கோப்பு படம்

இதனையடுத்து மீண்டும் ரதோட் அவரை அழைத்து, அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர்கள் பெற்றோர்கள் இழப்பீடாக பணம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு நிர்வாண வீடியோ கால் செய்த பெண் ஒருவர் அதனை ரெக்கார்ட் செய்து, மிரட்டி அவரிடம் ரூ.17.8 லட்சம் பெற்றுள்ளார்.

  குஜராத்-ஐ சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. சிறிது நேரம் சாதாரணமாக சென்ற பேச்சு, திடீரென ஆபாசமாக மாறியது.

  சில மெசேஜுகள் அனுப்பிய பின், அந்த பெண் வீடியோ கால் செய்துள்ளார். அதில் அந்த பெண் நிர்வாணமாக இருந்த நிலையில்,  வீடியோ காலில் வங்கி அதிகாரியின் முகத்துடன் வீடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அவரை வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு ரூ.10,000 கேட்டு மிரட்டியுள்ளார். கொடுக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

  அப்போது அவர் பணம் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று விக்ரம் ரதோட் என்பவர் அவரை தொடர்புகொண்டு, தான் டெல்லி சைபர் க்ரைம் காவல்துறையில் பணியாற்றுவதாகவும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.16.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டிய நிலையில், அந்த நபருக்கு சில தவனைகளாக அந்த பணத்தை செலுத்தியுள்ளார்.

  பின்னர் மீண்டும் தொடர்புக்கொண்டு அந்த வீடியோவை அந்த பெண் யூட்யூப்பில் வெளியிட்டதாகவும், அந்த சேனலின் ஓனர் ரன்வீர் குப்தா தொடர்பு கொள்வார் என கூறியுள்ளார். 2 நாள் கழித்து அவரை ரன்வீர் குப்தா தொடர்பு கொண்டு, வீடியோவை யூட்யூப்பில் இருந்து நீக்க ரூ.1.30 லட்சம் கேட்டுள்ளார். அன்று வங்கி விடுமுறை என்பதால் அவர் நண்பர் ஒருவர் மூலம் பணத்தை ஆன்லைனில் ட்ரான்பர் செய்துள்ளார்.

  இதையும் வாசிக்க: காரைக்குடியில் சரக்கு வாகனத்தை வழிமறித்து ரூ.11 லட்சம் கொள்ளை... 3 பேர் கைது...

  இதனையடுத்து மீண்டும் ரதோட் அவரை அழைத்து, அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் அவர்கள் பெற்றோர்கள் இழப்பீடாக பணம் கேட்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பயந்துப்போன அந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, பந்த்ரா காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Cyber crime, Video calls